தோனி மட்டுமல்ல சிஎஸ்கேவிற்கும் தொடர்பு உள்ளதா? அம்ரபலி முறைகேட்டில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!
அம்ரபலி நிறுவன ரியல் எஸ்டேட் முறைகேடு காரணமாக சிஎஸ்கே அணியும் சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video
டெல்லி: அம்ரபலி நிறுவன ரியல் எஸ்டேட் முறைகேடு தொடர்பான வழக்கில் சிஎஸ்கே அணியும் சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.
உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் அம்ரபலி குரூப்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வீடுகளை கட்டிக்கொடுக்காமல் ஏமாற்றி உள்ளது. இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் அந்த நிறுவனம் பல கோடிகளை மோசடி செய்துள்ளது.
இது தொடர்பாக 2500 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. தங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வீடுகளை கட்டிக்கொடுக்கவில்லை என்று அம்ரபலி குரூப்ஸ் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது.

இன்னொரு சிக்கல்
இது மட்டுமில்லாமல் அம்ரபலி நிறுவனம் மூலம் முறைகேடாக அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு பணம் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது மக்களிடம் வாங்கிய பணத்தை வைத்து வீடு கட்டாமல், அதை, இந்த அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் முதலீடாக செய்து இருக்கிறார்கள்.

என்ன முதலீடு
இந்த முறைகேட்டில் தோனிக்கு பங்கு இருப்பதாக நிறைய புகார்கள் எழுந்து வருகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தோனிக்கு நெருக்கமான நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தோனி விளம்பர தூதராக இருந்தார். அவரின் மனைவி சாக்சி இயக்குனராக இருந்தார். இதுதான் சர்ச்சைக்கு காரணம்.

சிஎஸ்கே
தோனி மட்டுமில்லாமல் தற்போது அம்ரபலி நிறுவன ரியல் எஸ்டேட் முறைகேடு காரணமாக சிஎஸ்கே அணியும் சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது. சிஎஸ்கே அணிக்கு 2015ல் ஐபிஎல் தொடரில் விளம்பர பார்ட்னராக அம்ரபலி நிறுவனம் இருந்துள்ளது. அம்ரபலி லோகோவை உடையில் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

எப்படி நடந்தது
இதிலும் அம்ரபலி நிறுவனத்தின் கருப்பு பணம் அதிக அளவில் விளையாடி உள்ளதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதை சிஎஸ்கே தரப்பு மறுத்துள்ளது. அம்ரபலி நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்ததாக எந்த விதமான ஆதாரமும் இல்லை. சிஎஸ்கே சார்பாக எந்த விதமான அதிகாரப்பூர்வ ஒப்பந்தமும் இதில் செய்யப்படவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்ட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications