விமானத்திற்குள் இத்தனை அருவருப்புகளா? இதை கடந்துதான் வேலைபார்க்கனுமா.. பணிப்பெண் வேதனை
டெல்லி: விமானத்தில் எந்த மாதிரியான அருவருப்பான விஷயங்கள் நடந்துள்ளன என்பது குறித்து விமான பணிப்பெண் ஒருவர் விவரித்துள்ளார். பார்ப்பதற்கு விமானங்கள் சொகுசாக தெரிந்தாலும் அதன் பின்னால் இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் தெரியாது.
விமானத்தில் பயணம் செய்வது என்பது அனைவரது வாழ்விலும் ஒரு ஆசையாக இருக்கும். பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் அடிக்கடி இந்த சொகுசு பயணத்தை அனுபவிப்பர். ஆனால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இது வெறும் கனவாக இருக்கும்.

ஆயிரக்கணக்கான அடியில் பறக்கும் விமானம், ஜில் ஜில் என இருக்கும் சூழல், வானில் மிதக்கும் தருணம் என எல்லாமே அழகாக இருக்கும். இத்தனை சுவாரஸ்யங்களை கொண்ட இந்த விமான பயணத்தில் திரைக்கு பின்னால் நிறைய கதைகள் இருப்பதாகவும் மக்கள் தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதை விமான பணிப்பெண் ஒருவர் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் சொகுசு விமான நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஏர் ஹோஸ்டஸ்ஸாக பணிபுரிந்து 36 ஆயிரம் அடி உயரத்தில்தான் செல்ல நேரும் போது நடந்த சம்பவங்கள் குறித்து விவரித்துள்ளனர்.
விமானப் பணிப்பெண் மிகுசோவா தனது டயரி ஆப் தி பிளைட் அட்டென்டென்ட் என்ற புத்தகத்தில் மிகவும் அருவருக்கத்தக்க விஷயங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். ஒரு முறை துருக்கி பயணத்தின் போது 3 பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றார்.
அது விமானம் முழுவதும் சிந்திய நிலையில் துப்புரவு பணியாளர்கள் முறையாக சுத்தம் செய்யாமல் குப்பையை போட்டு மூடிவிட்டனர். சில நேரங்களில் மாதவிடாய் ரத்தம் சிந்தி இருக்கும். ஆனால் அதை சுத்தம் செய்ய நேரமில்லாமல் அதன் மீது ஒரு போர்வை போடப்பட்டிருக்கும்.
இந்திய விமானங்களில் பயணிகள் தங்கள் கால்களைத் துடைக்க துண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஒரு முறை ஒரு பயணி இதை விட அதிகமாக செய்தார். அந்த டவலைக் கேட்டதும் அவர் தர மறுத்து, அந்த டவலால் அக்குளை துடைக்க ஆரம்பித்தார். பின்னர் அந்த அசுத்தமான டவலை என்னிடம் தந்தார். நான் வாங்க தயங்கினேன். பிறகு அந்த டவலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தேன்.
அனைவரும் உணவு உண்ணும் போது ஒரு பெண் தனது குழந்தையின் டயபரை மாற்ற ஆயத்தமானார். நான் அவர்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினேன். நான் அவ்வளவு சொல்லியும் அந்த பெண் டயப்பரை மாற்றிவிட்டு தன் வேலை முடிந்ததாக கூறினார். மேலும் டயப்பரை தனது இருக்கைக்கு அடியிலேயே வைத்துவிட்டு சென்றார்.
சில நேரங்களில் பெற்றோர்கள் சீட் பாக்கெட்டுகளில் குழந்தைகள் மலம் கழித்த டயப்பர்களை செருகிவிடுகிறார்கள். தங்களுடன் சக பயணிகள் பயணிக்கிறார்கள், தாங்கள் செய்த தவறுகளால் தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள், சுகாதார சீர்கேடு என்பதை கருத்தில் கொண்டு இந்த விஷயங்களை எல்லாம் பொதுமக்கள் கைவிட வேண்டும். இவ்வாறு அந்த விமான பணிப்பெண் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications