டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஸ்டர்.அர்விந்த் கெஜ்ரிவால்! உங்க மகளை கடத்தப்போறோம்.. மிரட்டல் மெயில்.. பதறிய போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த மர்ம இ-மெயில்

    டெல்லி: உங்கள் மகளை கடத்தப் போகிறோம் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த இ மெயிலை அடுத்து, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அந்த கட்சியின் தலைவர், அர்விந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அலுவலகத்துக்கு கடந்த 9-ம் தேதி மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

    An anonymous email reportedly threatened to kidnap arvind kejriwals daughter

    அதில், 'உங்கள் மகள் ஹர்ஷிதாவைக் கடத்தப் போகிறோம். அவரைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று எழுதப்பட்டிருந்தது. மிரட்டல் மெயில் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

    மிரட்டல் மெயில் குறித்த விவரங்களை முதல்வர் அலுவலக அதிகாரிகள், காவல்துறைக்கு அனுப்பி உள்ளனர். அர்விந்த் கெஜ்ரிவாலின் மகள் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
    இந்த மிரட்டல் மெயிலை யார், எங்கிருந்து அனுப்பியது என்பது குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து பேசிய டெல்லி காவல்துறை கூறுகையில்,அர்விந்த் கெஜ்ரிவால் மோடியை தீவிரமாக எதிர்ப்பவர் என்பதால், அதை பிடிக்காத நபர்கள் யாரேனும் இவ்வாறு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று எண்ணுகிறோம்.
    அவரது அரசியல் எதிரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று கூட சந்தேகம் எழுந்துள்ளது.

    மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். ரகசியமாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினர். முன்னதாக கெஜ்ரிவால் வீடு, அலுவலகத்தில் வரிமான வரி சோதனை நடத்தப்பட்டது, நினைவிருக்கலாம்.

    English summary
    Delhi Chief Minister Arvind Kejriwal's office has received an anonymous email that threatened his daughter to kidnap her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X