சீனாவுக்கு செக்! மலேசியாவுடன் கை கோர்த்த இந்திய கடற்படை! இனி இந்திய பெருங்கடல் நமது கட்டுப்பாட்டில்!
டெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா-மலேசியா கடற்படையின் கூட்டு வலிமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் மலேசியாவுக்கு சென்றிருக்கின்றன. இது சர்வதேச அரசியலில் முக்கிய மூவாக பார்க்கப்படுகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை மழுங்கடிக்கும் விதமாக சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் மாலத்தீவை கையில் போட்டுக்கொண்டதன் மூலம் இதனை சாத்தியப்படுத்த துடித்துக்கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இந்தியா இதுவரை ஏராளமான உதவிகளை செய்திருக்கிறது. இருப்பினும், சீன ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து இலங்கை இன்னும் வெளியே வரவில்லை.

அதேபோலதான் மாலத்தீவும். இந்த தீவில் சமீபத்தில்தான் அதிபர் தேர்தல் நடந்தது. அதற்கு முன்னர் வரை இங்கு இந்திய ஆதரவு அதிபர்தான் இருந்தார். ஆனால் இந்த தேர்தலில் சீன ஆதரவாளரான முகமது முய்ஜு புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவியேற்றவுடன் பிறப்பித்த உத்தரவு, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்தது வந்தனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி வீரர்கள் அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு உத்தரவிட்டார்.
தற்போது மாலத்தீவிலிருந்து அனைத்து இந்திய வீரர்களும் வெளியேறியுள்ளனர். இப்படி இருக்கையில்தான் மலேசியாவுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் 2 சென்றிருக்கிறது. நட்பு ரீதியாக இந்தியாவும், மலேசியாவை சேர்ந்த கடற்படையும் சந்தித்துக்கொள்வதும், போர் குறித்த பயிற்சிகளை மேற்கொள்வதும் வழக்கம். இதனை செயல்பாட்டு வரிசைப்படுத்துதல் என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இன்று இந்தியாவிலிருந்து 'டெல்லி' மற்றும் 'சக்தி' என இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் மலேசியாவின் கோட்டா கினாபாலுவுக்கு சென்றுள்ளன. மலேசியாவின் ராயல் நேவி இந்திய போர்க்கப்பல்களுக்கு சிறப்பான வரவேற்பளித்திருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "இந்த நிகழ்வு என்பது இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்தும். இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரம் பழகி, பல்வேறு யுக்திகளை பகிர்ந்துக்கொள்வார்கள். இந்த பயணத்தின் இறுதியில் இரு நாட்டு போர்க்கப்பல்களும் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியில் ஈடுபடும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் டெல்லி கடற்படை கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அதேபோல சக்தி கப்பல், விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு ஆதரவாக செயல்படும்.
இந்தியா மற்றும் மலேசியாவின் இந்த நடவடிக்கைள் சர்வதேச அளவில் உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவால் கவனிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications