5 தலைமுறையினர் ஒரே வீட்டில்! ஆசிர்வாதம்! கண்ணுப்பட போகுது.. ஆனந்த் மகிந்திராவின் நெகிழ்ச்சி வீடியோ
டெல்லி: இந்தியாவில் 5 தலைமுறையினர் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கும் வீடியோவை பகிர்ந்தார் ஆனந்த் மகிந்திரா.
Recommended Video
பழங்காலத்தில் மக்கள் கூட்டுக் குடும்ப வாழ்வியலை கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டில் ஒரு வேளைக்கே 10 முதல் 15 பேருக்கு சமைத்து எல்லாரும் ஒன்றாக அமர்ந்து உண்பது என இருந்தது.
அந்த குடும்பத்தினரின் பிள்ளைகளும் பெரியவர்களை பார்த்து ஒற்றுமையாக இருக்க பழகுவர். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் தம்பிகள், அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா, அவர்களது குழந்தைகள் என இருந்தனர்.

வாழ்வியல் முறை
ஆனால் அந்த வாழ்வியல் முறை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அதாவது ஒரு வீட்டில் அப்பா, அம்மா, அவர்களது குழந்தைகள், அவர்களுடயை தாத்தா, பாட்டி உள்ளிட்டோர் இருந்த வந்தனர். இது கால போக்கில் சுருங்கி அப்பா, அம்மா, குழந்தைகள் என 3 அல்லது 4 பேராக சுருங்கிவிட்டது.

கணவன் - மனைவி
இதற்கு காரணம் ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் பெரியவர்களை கவனிக்க ஆள் இல்லாத நிலை. மேலும் கணவனும் மனைவியும் வேலைக்காக சொந்த ஊர்களை விட்டுவிட்டு நகரங்களுக்கு நகர்வதால் இந்த இயந்திர வாழ்க்கை வீட்டின் பெரியவர்களுக்கு பிடிக்காத நிலை உள்ளது.

5 தலைமுறையினர்
ஆனால் ஒரே வீட்டில் 5 தலைமுறையினர் வசிக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? குழந்தை, அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா என 5 தலைமுறையினர் ஒன்றாக வசிக்கிறார்கள். இது போன்ற குடும்ப கட்டமைப்பு இப்போது காண முடிவதில்லை.

வீடியோ
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் என்ன ஒரு ஆசிர்வாதம்! 5 தலைமுறையினர் ஒன்றாக வசிக்கிறார்கள். இந்த உலகில் எத்தனை குடும்பத்தினர் இது போல் 5 தலைமுறையாக தந்தை வழியிலோ தாய் வழியோ வசித்து வருகிறார்கள்? இது அரிதான விஷயம். இந்தியாவை சேர்ந்த இந்த குடும்பத்தினரின் வீடியோவை பார்ப்பது சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

5 பேர் ஒன்றாக நிற்கும் காட்சி
அந்த வீடியோவில் ஒரு சிறுவன் தனது தந்தையை அழைக்கிறான். அவர் வந்து அவருடைய தந்தையை அழைக்கிறார். இப்படியே கொள்ளு தாத்தா எள்ளு தாத்தா வரை அழைக்கிறார். 5 பேரும் ஒன்றாக நிற்கிறார்கள். அதிலும் எள்ளு தாத்தா மிகவும் வயதானவராக இருக்கிறார். தத்தி தடுமாறி வருகிறார். ஆனாலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

கண்ணு பட போகுது
ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்டிற்கு நிறைய பேர் தாங்கள் 4 தலைமுறை, 5 தலைமுறையாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது கண்களே பட்டுவிடும் போலிருக்கிறது. கூட்டு குடும்பம் என்பது எப்போதுமே நமக்கு நல்லதையும் வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications