எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி.. குளுகுளு வீடியோ மூலம் வாழ்க்கை பாடத்தை கற்பிக்கும் ஆனந்த் மகிந்திரா!
டெல்லி: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து 360 டிகிரி காட்சியை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது வீடியோவில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் எதிர்நீச்சல் போடுவது எப்படி என்பது குறித்து பாடத்தையும் அவர் எடுத்துள்ளார்.
Recommended Video
உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்றால் அது எவரெஸ்ட் மலைச் சிகரம்தான். இது நேபாளத்தில் இருக்கிறது. இதன் உயரம் 8,848 மீட்டர் உயரமாகும்.
இது இமயமலையின் ஒரு பகுதியாகும். சீனா மற்றும் நேபாளம் இடையே சர்வதேச எல்லையாகும். இந்த மலை மலையேற்ற வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இங்கு மலையேறுவது என்பது மிகவும் சவாலான காரியம் ஆகும்.

4 மில்லி மீட்டர் உயரம்
இந்த மலை ஆண்டுதோறும் 4 மில்லி மீட்டர் உயரம் கூடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த மலை உச்சியை மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களே அடைய முடியும் என்கிறார்கள். எனினும் மாற்றுத்திறனாளிகள் சிலரும் இந்த மலை உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார்கள்.

360 டிகிரி காட்சி
இந்த மலையின் உச்சியில் இருந்து 360 டிகிரி காட்சிகளை ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆங்காங்கே வெள்ளை போர்வை போர்த்தியது போல் மலை முகடுகள் தெரிகின்றன. பள்ளங்கள், ஒரு சிலையும் காணப்படுகிறது. ஒரு பக்கம் வெண்மையாகவும் மறுபக்கம் கருப்பாகவும் காண்பதற்கே கண்கள் கோடி வேண்டும் என்ற அளவுக்கு உள்ளது.

மலை உச்சி
அந்த மலை உச்சியிலிருந்து பார்த்தால் வானம் தொட்டுவிடும் தூரத்தில் உள்ளதாகவே தோன்றுகிறது. இந்த கண்களுக்கு இதமளிக்கும் வீடியோவை அதுவும் கோடை காலத்தில் மக்களை வாட்டி எடுக்கும் போது வெளியிடப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வாழ்க்கையின் தத்துவத்தையும் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.

எவரெஸ்ட் சிகரம்
இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில் எவரெஸ்ட் மலை உச்சியிலிருந்து 360 டிகிரி காட்சிகள் இதுவாகும். சில நேரங்களில் கடினமான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டிய சூழல் வரும் போது நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருக்கிறீர்கள் என கற்பனை செய்து பார்க்க இந்த வீடியோ உதவுகிறது.

கடினமான பிரச்சினை
இந்த உச்சியில் இருந்து நீங்கள் கடினமான பிரச்சினை என சொல்பவைகளை பார்க்கும் போது அவைகள் எல்லாம் எளிதாக தெரியும் என்று தெரிவித்துள்ளார். இவர் கண்களுக்கு அற்புதமான காட்சிகளை கொடுத்ததோடு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவது எப்படி என்பது குறித்தும், கஷ்டமான பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications