ஆனந்த் மஹிந்திரா கொடுக்கும் ஐடியா.. டெல்லி காற்று மாசுபாட்டுக்கு தீர்வு.. நல்லா இருக்கே! சாத்தியமா?
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு பயிர்க்கழிவுகளை எரிப்பதே முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான சூப்பர் ஐடியாவை வழங்கி உள்ளார்.
தலைநகர் டெல்லி தற்போது பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. அதாவது டெல்லியில் காற்று மாசுபாடு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக டெல்லியின் காற்று தரக்குறியீடு என்பது 400க்கும் அதிகமாகி உள்ளது. இது காற்று மாசுபாடு என்பது அபாயகரமான நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.
மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சுவாச பிரச்சனையை உருவாக்கலாம். அதாவது சுவாசப் பாதை கோளாறு உள்பட ஆஸ்துமா தொடங்கி நுரையீரல் புற்றுநோய் வரை இந்த காற்று மாசுபாடு என்பது ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் தான் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஐடி உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ‛வொர்க் ப்ரம் ஹோம்' வசதியை வழங்கி உள்ளன. இதற்கிடையே தான் டெல்லியின் காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசும், டெல்லியை ஆட்சி செய்யும் ஆம்ஆத்மி அரசும் நடவடிக்கையை தொட்ஙகி உள்ளன.
அதன்படி வாகனங்களை பதிவு எண் அடிப்படையில் ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் கொண்டு பயணத்துக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதோடு டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவும், சுதான்சு துலியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.
அப்போது டெல்லி காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப்பில் பயிர் கழிப்பில் எரிப்பது தான் முக்கிய காரணம் என வாதிடப்பட்டது. இதற்கு பஞ்சாப் மாநில அட்டர்னி ஜெனரல் மறுப்பு தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் பஞ்சாப்பில் பயிர்க் கழிவு எரிப்பதை உங்கள் மாநிலத்தில் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். மேலும் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவிலும் பயிர் கழிவுகளை எரிப்பதை தடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
To heal Delhi’s pollution, Regenerative Agriculture MUST be given a chance. It provides a remunerative alternative to stubble burning while simultaneously increasing soil productivity. @VikashAbraham of @naandi_india stands ready to help. Let’s do it!
— anand mahindra (@anandmahindra) November 7, 2023
pic.twitter.com/XvMPAghgdQ
இந்நிலையில் தான் டெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மீளாக்க வேளாண்மைக்கு (Regenerative Agriculture) வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது மண்ணின் உற்பத்தி திறனை ஒரே நேரத்தில் அதிகரிக்கும் என்பதோடு, குச்சிகளை எரிப்பது என்பது லாபகரமான தொழிலாக மாறும். இதற்கு நாண்டி இந்தியாவின் விகாஸ் ஆபிரகாம் உதவ தயாராக இருக்கிறோம். செய்வோம்'' என தெரிவித்துள்ளார்.

அதாவது மீளாக்க வேளாண்மை என்பது பயிர் கழிப்புகளை எரிப்பதை முற்றிலுமாக தடுக்கும். அதோடு பயிர் கழிவுகளை ஒன்றாக சேர்த்து உரமாக்கும் முறையை அடிப்படையாக கொண்டது. இதன்மூலம் பயிர்க்கழிவுகள் எரிப்பது, அதானால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்கலாம். மேலும் பயிர் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து பயன்படுத்துவது என்பது உழவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் அது மண்வளத்தையும் பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications