டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்குதான் குடும்பமும் இல்லை, கொண்டாட்டமும் இல்லையே... மோடியை ‘தரலோக்கலாக’ தாக்கும் காங்.!

loksabha elections 2019, congress leader anand sharma, prime minister modi on viraat row, லோக்சபா தேர்தல் 2019, காங்கிரஸ் தலைவர் அனந்த் சர்மா, பிரதமர் மோடியின் ஐஎன்எஸ் விராத் பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமராக பதவி வகிப்பவருக்கு குடும்பம் இருந்தால் விடுமுறை கொண்டாட்டங்களுக்கு செல்வது வழக்கமானதுதான்; ஆனால் உங்களுக்கு குடும்பம் இல்லையே என பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக தாக்கியுள்ளது.

பிரதமர் மோடி, என்னுடைய ராணுவம் பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது என தேர்தல் பிரசாரத்தில் பேசினார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், ராணுவம் உங்கள் சொத்து அல்ல என்றார்.

Anand Sharma slams PM Modi Over INS Viraat Row

ராகுலுக்கு பதிலளித்து பேசுகையில், ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடியது உங்கள் தந்தைதானே என்றார் மோடி. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பாஜக, காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் கடற்படை அதிகாரிகள் என பலரும் இந்த சர்ச்சையில் குதித்திருக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அனந்த் ஷர்மா இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

அதில், பிரதமர் பதவி வகிக்கும் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். ஆனால் இந்த பிரதமருக்கு (மோடி) குடும்பம் என்று எதுவும் இல்லை. ஒருவேளை அவருக்கு குடும்பம் இருந்திருந்தால் அவரும் விடுமுறை கொண்டாட்டத்துக்கு போயிருப்பார்.

குட்கா முறைகேடு.. தமிழக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை.. பரபரப்பு தகவல்கள் குட்கா முறைகேடு.. தமிழக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை.. பரபரப்பு தகவல்கள்

ஆனால் தனியாகத்தான் வெளிநாடுகளுக்குப் போகிறார் பிரதமர் மோடி. அவருக்கு குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு குடும்ப தொடர்பான மதிப்பீடுகளுக்கு மரியாதை கொடுக்கவும் தெரியவில்லை. இவ்வாறு அனந்த் ஷர்மா கூறினார்.

English summary
Senior congress leader Anand Sharma has slammed PM Modi over the INS Viraat Row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X