ஜெகன் அண்ணாவுக்கு எதிராக தங்கை ஷர்மிளா.. பரபரக்கும் ஆந்திரா அரசியல்.. பரம எதிரிகளாக இத்தனை காரணமா?
டெல்லி: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பரம எதிரியாக தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா உருவெடுத்துள்ளார். தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்க்க காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா. அண்ணன் ஜெகன் மோகனை எதிர்த்து தங்கை ஷர்மிளா களமிறங்க அப்படி என்ன காரணமாம்?
ஆந்திரா அரசியலில் அசைக்க முடியாத மக்கள் தலைவராக உருவெடுத்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. ஆந்திரா காங்கிரஸ் கட்சியின் முகமாக திகழ்ந்தவர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அப்போது ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல காங்கிரஸ் அவரை ஒதுக்கி வைக்க காங்கிரஸ் கட்சியை விட்டே வெளியேறி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கி இன்று பெரும்பான்மை ஆதரவுடன் ஆந்திரா முதல்வராக இருந்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஜெகன் மோகன் ரெட்டி வழக்குகளில் சிக்கி சிறைக்குப் போன போது அவரது சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாதான் கட்சியை பார்த்துக் கொண்டார். அப்பா, அண்ணன் பாணியில் பாதயாத்திரை மேற்கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை காப்பாற்றியவர்தான் ஷர்மிளா. ஆனால் இப்போது ஜெகனும் ஒய்.எஸ்.ஷர்மிளாவும் எலியும் பூனையுமாக அரசியல் எதிரிகளாக பிரிந்து நிற்கின்றனர்.
அண்ணன் ஜெகனுக்கு எதிராக தங்கை ஷர்மிளா இப்படி களமிறங்க என்ன காரணம்? ஜெகன் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த பல்வேறு சம்பவங்கள்தான் இன்று ஷர்மிளா, அரசியல் எதிரியாக ஜெகனை எதிர்க்க காரணம் என்கின்றனர் ஆந்திராவின் மூத்த பத்திரிகையாளர்கள்.
2019-ல் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டியை ஜெகன் மனைவி குடும்பத்தினர் கொலை செய்தனர். கடப்பா தொகுதியை ஷர்மிளாவுக்கு கொடுக்க சொன்னார் விவேகனந்தா ரெட்டி. ஆனால் ஜெகன் மனைவி குடும்பத்தை சேர்ந்த அவினாஷுக்கு சீட் கொடுக்கப்பட்டது. தங்களுக்கு சீட் தர முட்டுக்கட்டையாக இருந்ததால் விவேகானந்த ரெட்டியை போட்டுத் தள்ளியது ஜெகன் மனைவி குடும்பம். இதில் ஜெகனுக்கு எதிரான சிபிஐயின் 'ரகசிய சாட்சி' ஷர்மிளா எனவும் சொல்லப்படுகிறது.
மேலும் ஆந்திராவில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டி, தங்கை ஷர்மிளா அரசியலில் முழு வீச்சில் களமிறங்கி தமக்கு போட்டியாக வந்துவிடக் கூடிய எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் தர விரும்பவில்லையாம். இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸிலும் ஷர்மிளாவுக்கு அதீத முக்கியத்துவத்தையும் தராமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் ஆந்திராவின் செல்வாக்குமிக்க குடும்பமான ஒய்.எஸ்.ஆர். குடும்பத்தில் இருக்கும் சொத்து பங்கீடு விவகாரம். ஜெகனுக்கும் ஷர்மிளாவுக்கும் சொத்து விவகாரத்தில் முட்டல் மோதல் இருந்து வருகிறதாம்.
அரசியலில் தமக்கு என ஒரு தனித்துவத்தை விரும்பக் கூடியவரான ஷர்மிளாவுக்கு இப்படியான அண்ணன் ஜெகனுடனான அடுத்தடுத்த கசப்புகள்தான் தெலுங்கானாவுக்கு போய் தனிக் கட்சியை தொடங்க வைத்தது. தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கிய ஷர்மிளாவுக்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. இதனாலேயே தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தார்; இப்போது காங்கிரஸிலேயே இணைந்துவிட்டார். ஆந்திராவில் இனி ஜெகனுக்கு எதிராக ஷர்மிளா தமது ருத்ரதாண்டவத்தை எப்படி காட்டுவார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications