அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கடனை.. 'பிராடு' என வகைப்படுத்தியது SBI
டெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனத்தின் கடன் கணக்கை 'பிராடு' என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கிய மற்ற வங்கிகளும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் கணக்கை 'மோசடி' என்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது
ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக அறியப்பட்ட அனில் அம்பானி, கடந்த காலங்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். 2018-19-ல் ரிலையன்ஸ் கேப்பிடல் மற்றும் 2011-ல் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகியவை சரிவை கண்டன. இதனை தொடர்ந்து 2024-ல் ரிலையன்ஸ் பவரும் சரிவை கண்டது.

கடந்த 2024ல் சோலார் திட்ட ஏலங்களில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்கேற்றிருந்தது. ஆனால், போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த ஏலத்தில் நிறுவனம் பங்கிருந்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 'இந்திய சோலார் சக்தி கழகத்தின்' தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இதே ஆண்டு நவம்பர் மாதம் இந்நிறுவனத்திற்கு எதிராக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டெண்டர்களில் பங்கேற்க இந்நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய அடியாக மாறியது. இருப்பினும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து, இந்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது. ஆனால் அடுத்த பிரச்சனை பின்னாடியே வந்தது.
ரிலையன்ஸ் கேப்பிடல்
அதாவது ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் பெற்ற கடன் மற்றும் எந்த நோக்கத்திற்காக கடன் பெறப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக கடன் செலவழிக்கப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகின் முன்னணி தணிக்கை மற்றும் ஆலோசனை நிறுவனமான PwC, கடந்த 2018-19ம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் தணிக்கையை மேற்கொண்டது. இந்த தணிக்கைகளில், ரூ.12,751 கோடி அளவுக்கு கடன் முறைகேடான வழிகளில் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மேலும் தணிக்கை மேற்கொள்ள முயன்றபோது, அதை நிறுவனம் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த PwC தணிக்கை செய்யும் வேலையிலிருந்து விலகிக்கொண்டது.
இதனை தொடர்ந்து Grant Thornton நிறுவனம் தணிக்கை பணியை தொடங்கியது. இதில் இன்னொரு விஷயம் வெளியில் வந்தது. அதாவது ரூ.12,000 கோடி பணம் வேறு நோக்கங்களுக்காக திருப்பி விடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.
வேறு நோக்கம் எனில், நிறுவனத்திற்காக புதிய பொருட்களை வாங்க வங்கியில் கடன் வாங்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த கடனை வைத்து, ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டிருக்கும். இது நிதி முறைகேடாகும்.
எனவே இந்த விவகாரம் குறித்து செபி விசாரணையை மேற்கொண்டு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய பல நிறுவனங்கள்/நபர்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மட்டுமல்லாது அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இப்படி தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் அனில் அம்பானியின் நிறுவனம் சிக்கி வந்த நிலையில், எஸ்பிஐ ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கடனை பிராடு என வகைப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் அதிக அளவில் கடனை கொடுத்திருக்கின்றன. மக்கள் பணத்தை எதற்காக இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி கொடுக்கிறீர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications