டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை! உள்ளே வரும் ஓபிஎஸ் & டிடிவி? தேர்தல் களத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்
டெல்லி: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அண்ணாமலை இப்போது டெல்லிக்குச் சென்றுள்ள நிலையில், தமிழக அரசியல் சூழல் தொடர்பாக அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறுகிறது. இப்போதே எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது. பிரச்சாரம் மற்றும் கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

அண்ணாமலை
இதற்கிடையே தேர்தலுக்கு முன்பே என்டிஏ கூட்டணியை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் உள்ளே கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான காய்களை அண்ணாமலை நகர்த்தி வருகிறார்.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவருமே முன்பு என்டிஏ கூட்டணியில் தான் இருந்தார்கள். ஆனால், அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு இருவருமே கூட்டணியில் இருந்து விலகினர். இருப்பினும், அவர்களை உள்ளே கொண்டு வந்தால் தான் அதிமுக வாக்கு வாங்கி முழுமையாகக் கிடைக்கும் என்பதால் அவர்களைச் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டது.
டெல்லி பயணம்
முதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் டெல்லிக்குப் போனார். அங்கு அவர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர் தமிழகம் திரும்பிய மறுநாளே அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார். அவரும் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு தமிழகம் திரும்பிய அண்ணாமலை, கடந்த 7ம் தேதி ஓபிஎஸை தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு டிடிவி தினகரன்- அண்ணாமலை சந்திப்பும் நடைபெற்றது. அண்ணாமலை வீட்டிலேயே டிடிவி தினகரனுக்கு இரவு விருந்து தரப்பட்டது. அதைத் தொடர்ந்தே ஓபிஎஸ் மற்றும் டிடிவியை என்டிஏ கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை
அவர்களை அதிமுகவில் இணைப்பதே முதலில் திட்டமாக இருந்தது. இருப்பினும், இதற்கு எடப்பாடி பழனிசாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்ன நடந்தாலும் இவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. அதேநேரம் அவர்கள் தனியாகக் கட்சியை ஆரம்பித்து, அதை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வந்தால் அதில் பிரச்சினை இல்லை என்று எடப்பாடி கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்து என்ன
அதைத் தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை டெல்லிக்குப் போனார். SIR தொடர்பாக பாஜக சார்பில் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி போவதாக அண்ணாமலை கூறியிருந்தார். இருப்பினும், அவர் நேற்றைய தினம் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்ததாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அப்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்தே யாரெல்லாம் அதிமுகவில் நேரடியாக மீண்டும் இணைகிறார்கள்.. யாரெல்லாம் என்டிஏ கூட்டணிக்குள் வருகிறார்கள் என்பது தெரிய வரும். இதனால் அடுத்த சில நாட்களுக்குத் தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்வுகள் ஏற்படுவது உறுதி!
-
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications