இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை திடீரென சந்தித்த அண்ணாமலை
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் அண்ணாமலை மனு அளித்தார்.
டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அந்நாட்டின் 13-வது சட்டத் திருத்தத்தை உடனே நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிரது. அதிமுக- பாஜக கூட்டணியில் அதிமுகவின் இரு அணிகளுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுகவின் ஓபிஎஸ் அணியோ, பாஜக வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் பெறுவோம் என்கிறது. அதிமுகவின் இபிஎஸ் அணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அகில இந்திய பாஜக தலைவர் ஜேபி நட்டாவை முதலில் சந்தித்தார் அண்ணாமலை. அப்போது தமிழ்நாட்டு அரசியல் நிலவரம், ஈரோடு கிழக்கு தொகுதி நிலைமை, அதிமுகவின் நிலைப்பாடுகள் குறித்து ஜேபி நட்டாவிடம் அண்ணாமலை விளக்கியதாக தெரிகிறது.
இதன்பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்கள் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இலங்கை தமிழர் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13-வது சட்ட திருத்தத்தை தாமதம் இல்லாமல் அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; இதில் மத்திய அரசு தலையிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றை தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் அண்ணாமலை வழங்கினார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடனான இந்த சந்திப்பின் போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இலங்கை தமிழர் அரசியல் பிரச்சனையில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் திடீரென மனு கொடுத்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications