Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதி வழங்குவதில் டாப் லிஸ்டில் தென் மாநிலங்கள்.. தமிழ்நாட்டின் இடம் என்ன தெரியுமா? வெளியான 'டேட்டா'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதி வழங்குவதில், அல்லது நீதிக்கான அணுகலை வழங்குவதில் வட மாநிலங்களை விட சிறந்த மாநிலங்களாக தென் மாநிலங்கள் இருக்கிறது என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

சமீப நாட்களாக நீதித்துறை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரஜுஜூ நீதித்துறையில் பெரிய அளவில் மாற்றம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் எனவே நீதிபதிகள் இதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என்றும் கூறியிருந்தர். மட்டுமல்லாது நீதிபதிகளை சக நீதிபதிகளே தேர்ந்தெடுக்கம் 'கொலீஜியம்' சிஸ்டம் மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

இவரது கருத்து அவ்வப்போது விவாதத்திற்குள்ளாகி வரும் நிலையில், ராகுல் காந்தி விஷயத்தில் மீண்டும் நீதித்துறை மீது கவனம் திரும்பியது. அதாவது கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'மோடி' சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டார். அவருக்கு எதிராக குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

வடமாநில நீதிமன்றம்

வடமாநில நீதிமன்றம்

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் இறுதி கட்டத்திற்கு வந்தது. கடந்த 23ம் தேதி இது தொடர்பாக தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், எனவே அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்த நீக்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவத்திற்கு ஏன் குஜராத்தின் சூரத் நகரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறத என்று கேள்வி எழுப்பினர்.

இந்திய நீதி அறிக்கை

இந்திய நீதி அறிக்கை

இந்நிலையில்தான் ஆண்டு தோறும் நீதிமன்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிடும் இந்திய நீதி அறிக்கை (India Justice Report) வெளிவந்துள்ளது. அதாவது, நீதி வழங்குவதில், அல்லது நீதிக்கான அணுகலை வழங்குவதில் வட மாநிலங்களை விட சிறந்த மாநிலங்களாக தென் மாநிலங்கள் இருக்கிறது என்பதை இந்த புள்ளிவிரங்கள் தெரிவித்துள்ளன. தென்னிந்தியாவில் நீதிமன்றத்தை அணுகுவது மிகவும் சுலபமானதாக இருக்கிறது என்பதுதான் இந்த புள்ளிவிவரங்களின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை இருக்கின்றன.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அடுத்த இரண்டு இடங்களில் குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசமும், கடைசி இடத்தில் உத்தரப் பிரதேசம் இருக்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 18 பெரிய மாநிலங்களிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சமூக நீதிக்கான மையம் ஆகியவை டாடா அறக்கட்டளையுடன் இணைந்து ஆண்டு தோறும் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகிறது. நீதித்துறை, காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவிகளை எளிதாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்று அனைத்தையும் இந்த புள்ளி விவரங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

கோவா

கோவா

இந்த புள்ளி விவரங்களின்படி 1 கோடிக்கும் குறைவாக உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பொறுத்த அளவில் சிறப்பாக நீதி அணுகலை வழங்குவதில் சிக்கிம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாது இடத்தில் அருணாச்சலம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள்ன இடம்பெற்றுள்ளன. இந்த சிறிய மாநிலங்களின் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது கோவாதான். இந்தியாவை பொறுத்த அளவில் நாட்டில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் சுமார் 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று 1987ஆம் ஆண்டு சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சிறை கைதிகள்

சிறை கைதிகள்

ஆனால் இந்த பரிந்துரை வந்து ஏறத்தாழ 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாம் இன்னும் இந்த இலக்கை எட்டவில்லை. தற்போது வரை 10 லட்சம் பேருக்கு 19 நீதிபதிகள்தான் இருக்கின்றனர். அதேபோல நாடு முழுவதும் 4.8 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது ஒருபுறம் எனில் மறுபுறம், சிறை கைதிகள் குறித்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாய் இருக்கின்றன. அதாவது, தற்போது வரையில் சிறையில் இருக்கும் கைதிகளில் வெறும் 22% பேர் மட்டுமே தண்டனை கைதிகள் ஆவார்கள். மீதமுள்ளோர் அனைவரும் விசாரணை கைதிகளாவார்கள். 2010ம் ஆண்டில் 2.4 லட்சமாக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2021ல் 4.3 லட்சமாக இருமடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+