டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் சீனாவின் தலையீடு.. நல்லது நடந்தால் ஓகே என்கிறது அமெரிக்கா!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சீனாவின் தலையீடு என்பது அமைதி முயற்சிகளுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Antony Blinken comments on Chinas involvement in Afghanistan

இந்தியா வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர். ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

துணை ராணுவ படையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. கை நிறைய சம்பளம்! துணை ராணுவ படையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. கை நிறைய சம்பளம்!

இதனிடையே தலிபான்கள் குழு ஒன்று சீனா சென்றிருந்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் அமைதி முயற்சிகளை கட்டி எழுப்புவதில் தலிபான்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்திருந்தது,

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆண்டனி பிளிங்கன், ஆப்கானிஸ்தானில் சீனாவின் தலையீடு என்பது அமைதி முயற்சிகளுக்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ராணுவ ரீதியாக வலிமை பெறுவதையும் அதை இஸ்லாமிய நாடாக்க மீண்டும் முயற்சிப்பதையும் யாரும் விரும்பவில்லை.

அப்படி செய்தால் ஆப்கானிஸ்தான் உலக நாடுகளிடையே தீண்டத்தகாத நாடாகிவிடும். ஆகையால் தலிபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வர வேண்டும் என்றார்.

English summary
US Secretary of State Antony Blinken has said that China's involvement in Afghan could be a positive thing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X