டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திரும்ப எலெக்சன் வையுங்க... மோடியின் கிளிப்பிள்ளை தேர்தல் ஆணையம்... டெல்லியில் நாயுடு பகீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் கிளிப்பிள்ளை தேர்தல் ஆணையம்: டெல்லியில் நாயுடு பகீர்- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் சொல்பேச்சை கேட்டு கிளிப்பிளையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், 150 வாக்கு மையங்களில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஒரே கட்டமாக ஆந்திராவின் 25 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதேபோல் அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது.

    தேர்தல் நடந்த அன்று ஏராளமான இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்கு ப்பதிவு தாமதாக தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. அங்கு சுமார் 76 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    ராகுலை போல் தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன் .. பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு விளக்கம்ராகுலை போல் தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன் .. பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு விளக்கம்

    நாயுடு கடிதம்

    நாயுடு கடிதம்

    இந்நிலையில் வாக்கு எந்திரம் வேலை செய்யாததால் ஆந்திராவில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், வாக்கு எந்திரம் வேலை செய்யாததால், மாநில தேர்தல் ஆணையர் கோபால் கிருஷ்ண திவேதி மீண்டும் அனுப்பிவைத்த வாக்கு எந்திரமும் வேலை செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.

    தர்ணா போராட்டம்

    தர்ணா போராட்டம்

    மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி உள்பட பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டி தேர்தல் நாள் அன்று தர்ணா போராட்டமும் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

    மிஷின் வேலை செய்யவில்லை

    மிஷின் வேலை செய்யவில்லை

    இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று டெல்லி வந்தார். அவர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரில் ஆந்திராவில் 30 முதல் 40 சதவீதம் வரை வாக்கு எந்திரங்கள் வேலை செய்யவில்லை. எனவே வாக்கு எந்திரங்கள வேலை செய்யாத 150 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    நாயுடு புகார்

    நாயுடு புகார்

    இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு ஆகும். ஆனால் அதேநேரம் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் சொல் பேச்சை கேட்டு செயல்படும் அமைப்பாக உள்ளது.எங்களுக்கு தேர்தல் ஆணையம் எங்களுடன் போதிய ஒத்துழைப்பு தரமறுத்துவிட்டது..

    நெருக்கடி

    நெருக்கடி

    தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடு மிகப்பெரிய கேலிக்கூத்தாகும். இந்தியாவிற்கே இது பேரிடர் ஆகும். இதனால் நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். எங்களுக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, 4583 வாக்கு எந்திரங்கள் ஆந்திர தேர்தலில் வேலை செய்யவில்லை. இதனால் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்றார்.

    English summary
    AP Chandrababu Naidu says Poll Body Works On pm modi's Instructions, who demanded a re-poll in nearly 150 polling stations in AP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X