டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதார ஆலோசகர் எதற்கு.. ஜோதிடரை நியமிச்சிருங்க.. நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: நாசாவின் கிரகங்கள் பற்றிய படங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் ‛‛இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க தலைமை பொருளாதார ஜோதிடரை நியமிங்க'' எனக்கூறி அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த பிரபஞ்சம் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா விண்வெளி மையங்கள் சேர்ந்து தயாரித்து விண்வெளிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை தற்போது படம் பிடித்து அனுப்பி வருகிறது.

மீண்டும் கார்த்தி சிதம்பரம் வீட்டு கதவை தட்டிய சிபிஐ.. அப்போ சாவி கிடைக்கல.. விடாமல் வந்து ரெய்டு!மீண்டும் கார்த்தி சிதம்பரம் வீட்டு கதவை தட்டிய சிபிஐ.. அப்போ சாவி கிடைக்கல.. விடாமல் வந்து ரெய்டு!

நாசா படத்தை பகிர்ந்த நிதி அமைச்சர்

நாசா படத்தை பகிர்ந்த நிதி அமைச்சர்

இதுதொடர்பான படங்கள் மற்றும் விபரங்களை நாசா வெளியிட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக ரசித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு டுவிட்டரில் படங்களுடன் வெளியிட்ட செய்திகளை தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவிட் செய்துள்ளார். இதில் யுரேனஸ், புளுட்டோ, வியாழன் கிரகங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

ப சிதம்பரம் விமர்சனம்

ப சிதம்பரம் விமர்சனம்

இதனை சுட்டிக்காட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்ய துவங்கி உள்ளது. இதுபற்றி இன்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தன்மீதும், பொருளாதார ஆலோசகர்களின் திறமை மீதும் நம்பிக்கையில்லாத நிலையில் நிர்மலா சீதாரமன் தலைமை பொருளாதார ஜோதிடரை நியமித்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தலைமை பொருளாதார ஜோதிடர்

தலைமை பொருளாதார ஜோதிடர்

இதுதொடர்பாக ப சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‛‛நாட்டில் பணவீக்கம் 7.01 சதவீதமாகவும், வேலையின்மை 7.8 சதவீதமாகவும் உள்ளது. இந்நிலையில் தான் நிதியமைச்சர் வியாழன், புளுட்டோ, யுரேனஸ் கிரகங்களின் படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதில் எங்களுக்கு ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது திறமை மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் திறமை மீதான நம்பிக்கையை கைவிட்டுள்ளார். இதனால் தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கிரகங்களை அழைத்துள்ளார். இதனால் அவர் புதிதாக தலைமை பொருளாதார ஜோதிடரை நியமித்து கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளார்.

Recommended Video

    China நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கும் India... என்ன காரணம்? *World
    செய்தி தொடர்பாளரும் விமர்சனம்

    செய்தி தொடர்பாளரும் விமர்சனம்

    முன்னதாக, இதேவிவகாரத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப், நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்து இருந்தார். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் அதனை கட்டுப்படுத்தாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யுரேனஸ், புளுட்டோ, வியாழன் கிரகங்கள் மீது ஆர்வம் காட்டுகிறார். நாட்டில் வேலையின்மை, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், பா.ஜனதா அரசு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு வைத்துள்ள திட்டம் என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    English summary
    Senior Congress leader P Chidambaram has criticized Finance Minister Nirmala Sitharaman for sharing NASA pictures of the planets on her Twitter page, saying appoint a chief economic astrologer to revive the Indian economy''.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X