நிர்மலா சீதாராமன் போட்ட முக்கிய உத்தரவு.. எஸ்பிஐ டூ எல்ஐசி மிகப்பெரிய மாற்றம்.. பயமுறுத்தும் நடவடிக்கைகள்?
ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளாவிய பொருளாதார பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், இந்தியாவுக்கான எரிபொருள் பெரிய அளவில் குறைந்திருக்கும் வேளையில், மோடி நாட்டுக்கு மக்களுக்கு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து டெல்லி அரசும் பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சிக்கன அறிவிப்புகளை விடுத்தது.
இந்த நிலையில் தர்போது மத்திய நிதியைச்சகம் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடுமையான செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிதி நிறுவனங்களான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பாங்க் ஆஃப் பரோடா (BoB), எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களை நேரடியாக பாதிக்க உள்ளது மட்டும் அல்லாமல் தனது தினசரி நடவடிக்கையில் பெரும் மாற்றத்தை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்கள்
மத்திய நிதி சேவைகள் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இனி தேவையற்ற அலுவலக செலவுகளை குறைக்கும் நோக்கில் பெரும்பாலான கூட்டங்கள், ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக அவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே நேரடி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணம், தங்கும் செலவு மற்றும் நிர்வாகச் செலவுகளை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
உயர் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம்
இந்த புதிய செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, அரசு நிதி நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடுமையான வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகள், தொழில்துறை சந்திப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பதை குறைத்து, முடிந்தவரை இணையவழி முறையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக பொருளாதார நிச்சயமின்மை அதிகரித்து வரும் நிலையில், தேவையற்ற வெளிநாட்டு நாணய செலவுகளை குறைக்கும் முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
மின்சார வாகனங்கள்
இதனுடன், மோடி, டெல்லி அரசு அறிவிப்புகளுக்கு இணையாக நிதியமைச்சகமும், அனைத்து அரசு நிதி நிறுவனங்களும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் செலவுகளை குறைப்பதோடு, பசுமை எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என கூறப்படுகிறது.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்காலத்தில் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களை அதிகமாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு அச்சம்
அடுத்துடுத்து வெளியாகும் அறிவுப்புகளால் எரிபொருள் இருப்பு வேகமாக குறைகிறதா என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஈரானின் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மூலம் வளைகுடா நாடுகள் மத்தியில் புதிய போர் உருவாகும் அச்சமும் அதிகரித்துள்ளது. இதனால் கூடிய விரைவில் போர் முடிவதற்கான வாய்ப்பும் குறைவு.
இப்படி அதிகரித்து வரும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் சர்வதேச சந்தை தடுமாற்றங்கள் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு நிறுவனங்களில் செலவு கட்டுப்பாட்டை கடுமையாக்கி வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications