விஜயபாஸ்கரின் மெகா ஷோ.. மாமல்லபுரத்தை அதிரவைத்த 500 கார்கள், 200 பேருந்துகளில் வந்த ஆதரவாளர்கள்
சென்னை: சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களை அரங்கேற்றியுள்ளது. அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் திமுக மற்றும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வரிசையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள், 8 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 15,000க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையவுள்ளனர். இதற்காக 200 பேருந்துகள், 500 கார்களுடன் மாமல்லபுரத்தில் விஜயபாஸ்கர் காட்டியுள்ள மெகா ஷோவால் தவெக மிரண்டுள்ளது.
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், திருச்சி வளர்மதி, எம்.எஸ்.எம் ஆனந்தன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் வைரமுத்து, இளம்பை தமிழ்செல்வன், ஒரத்தநாடு சேகர், திருச்சி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் மன்ராஜ், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தர்ராஜன் ஆகியோர் இன்று காலை தவெகவில் இணையவுள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

விஜயபாஸ்கரின் மெகா ஷோ
முன்னாள் அமைச்சர்களுடன் அவர்களின் ஆதரவாளர்கள் 12,000க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையவுள்ளனர். திமுக, அதிமுக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வோருக்கு ஸ்நேக்ஸ் பேக் வழங்கப்படும். தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுப்பது அரிதாக இருந்தது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும் தனியார் ஹோட்டலில் போடப்பட்டுள்ள இருக்கையில் தவெக துண்டு, விஜய் புகைப்படத்துடன் கூடிய பையில் ஸ்நாக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் இருந்து மட்டுமே 200 பேருந்துகள், 500 கார்களில் சாரை சாரையாக மாமல்லபுரம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இதனால் மாமல்லபுரமே ஸ்தம்பித்து கொண்டிருக்கிறது. காலை 7 மணி முதலே மாமல்லபுரம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. போலீசார் காலை முதலே போக்குவரத்தை சீர்செய்து வருகிறார்கள். தவெகவில் இணையும் அதிமுகவினர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், தன்னுடைய பவரை காண்பிப்பதற்கு விஜயபாஸ்கர் இந்த அதிரடிகளை நிகழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications