ஜாலியாக இருக்கும் அண்ணாமலை! தமிழக அரசியல் களேபரத்துக்கு நடுவே இன்று அமெரிக்கா பயணம்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இன்னொரு புறம் தவெகவின் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டு வருகிறது. இப்படி தமிழக அரசியல் கொதிநிலையில் இருந்தாலும் கூட அண்ணாமலை கண்டுக்கொள்ளாமல் இன்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்கிறார். இந்த அமெரிக்க பயணம் குறித்த விவரம் வருமாறு:
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. கடந்த ஆண்டு அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினார். 'We The Leaders' என்ற அமைப்பில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பை அரசியல் கட்சியாக்கும் முனைப்பில் அண்ணாமலை திட்டத்தை அறிவித்துள்ளார். தற்போது மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

பாஜகவில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் மட்டுமே அரசியல் கருத்துகளை கூறி வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்புகளை அவர் நடத்துவது இல்லை. தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக இடையேயான அரசியல் பஞ்சாயத்து பரபரப்புக்கு பஞ்சமின்றி தினமும் நடந்து வருகிறது.
அதன்படி அதிமுகவின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைகின்றனர். இன்று கூட அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட பிற முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் தவெகவில் இணைய உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தவெகவின் எம்எல்ஏவிடம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி தமிழக அரசியலில் அனல் பறக்கிறது. ஆனால் அண்ணாமலையே இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். இன்று மதியம் அண்ணாமலை தமிழகத்தில் இருந்து அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்ணாமலை திட்டமிட்டு இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
செந்தில் பாலாஜி - அண்ணாமலை இடையே அரசியலில் கடும் மோதல் உள்ளது. பாஜக மாநில தலைவராக இருந்தபோது செந்தில் பாலாஜியை, அண்ணாமலை கடுமையாக எதிர்த்தார். ஆனால் தற்போது அவர் மீதும், அவரது சகோதரர் மீதும் இப்படியா குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்துள்ள நிலையில் அண்ணாமலை மவுனம் காத்து வருகிறார். அண்ணாமலை இன்று காலை 8 மணிவரை இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் கவலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications