ரூ.5 லட்சம் தராவிட்டால் நிர்வாண வீடியோ வைரல்.. 63 வயது முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!.. 3 பேர் கைது
சென்னை: சமீபகாலாக ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் அருகே 63 வயதைச் சேர்ந்த முதியவரை அழைத்துச் சென்று நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதைக் காட்டி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (63) என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பத்மா (47), எஸ்தர் நான்சி (30) மற்றும் அவரது கணவர் முன்னா கருப்புசாமி (33) ஆகியோர் கோவிந்தசாமியை புழல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்துவிட்டு, அவரை நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி, ரூ. 5 லட்சம் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதையடுத்து பயந்துபோன கோவிந்தசாமி பணத்தை எடுத்து வருவதாகக கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், கோவிந்தசாமி நேராக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், பத்மா, எஸ்தர் நான்சி மற்றும் முன்னா கருப்புசாமி ஆகிய மூவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொடுங்கையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications