இன்னும் நிறைய பார்ப்பீங்க.. விஜயபாஸ்கர் சஸ்பென்ஸ்.. மாமல்லபுரத்தில் தொடங்கும் சீக்ரெட் ஆபரேஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களை அரங்கேற்றியுள்ளது. அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்து வருகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள், 8 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 15,000க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையவுள்ளனர். திருச்சி, கரூர், புதுக்கோட்டை அதிமுக கூடாராம் மொத்தமாக காலியாகவுள்ளது. இணைப்பு விழாவின்போது, இன்னும் நிறைய பார்ப்பீங்க என்று விஜயபாஸ்கர் சஸ்பென்ஸ் வைத்து பேசியிருப்பது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "புதுக்கோட்டையில் இருந்து சுமார் 200 பேருந்துகள், ஆயிரக்கணக்கான கார்களில் வந்துள்ளனர். பிரம்மாண்டமான இணைப்பு விழா, மாற்றத்திற்கான அடித்தளம் தவெகவின் மக்கள் சக்தி தலைவர் தலைமையில் இன்று தவெகவில் இணைகிறோம். இது ஒரு நிமிடத்தில் எடுத்த முடிவு இல்லை. விராலிமலை வாக்களித்த மக்கள், பயணித்த நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் ஆகியோரின் கருத்துகளை உணர்வோடு கேட்டு, அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Vijayabaskar TVK AIADMK

இன்னும் நிறைய இருக்கு

நிகழ்வு பிரம்மாண்டமாக உள்ளதை பார்த்திருப்பீர்கள். என்னுடைய விலகல் கடிதத்தை ஒருமுறைக்கு இரண்டு முறை நீங்கள் படித்தால் உங்களின் கண்களில் கண்ணீர் வரும். புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மாவின் கட்டி காத்த அதிமுக மீது எங்களுக்கு மிகப்பெரிய பற்று உள்ளது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனிப்பட்டரீதியாக எடுக்கும் தவறான முடிவி ஒரே காரணத்தால் தான் மாமல்லபுரத்தில் கடல்போல் மக்கள் குவிந்துள்ளனர்.

ஒட்டுமொத்த டெல்டாவே காலியாக கூடியை நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம் ஆனந்தன், வளர்மதி மற்றும் திருச்சி, ஒரத்தநாடு, புதுக்கோட்டை, பெரம்பூர் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தவெகவில் இணையவுள்ளனர். ஏற்கனவே கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர். நீங்கள் இன்னும் நிறைய பார்ப்பீர்கள்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் அதிமுகவை கூண்டோடு காலி செய்து, அவரும் தன்னுடைய நிர்வாகிகளுடன் பிரம்மாண்டமாக இணையவுள்ளார். தவெகவின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளேன்" என்று கூறினார். விஜயபாஸ்கர் சஸ்பென்ஸ் வைத்து பேசியிருப்பதால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிமுகவில் அதிருப்தியில் இருப்போரை தவெகவில் இணைப்பதற்கான சீக்ரெட் ஆபரேஷனை விஜயபாஸ்கர் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+