டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெகா வீடியோ கான்பரன்ஸ் இப்ப தேவையா.. முதலில் அபிநந்தனை மீட்கப் பாருங்கள்.. கெஜ்ரிவால் கோபம்

வீடியோ கான்பரன்ஸ் ஒத்தி வையுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் இன்று மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மீட்டிங்... எதுக்கு தெரியுமா?

    டெல்லி: "இப்ப இந்த மெகா வீடியோ கான்பிரஸ் தேவைதானா? அபிநந்தனை முதலில் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

    40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை தாக்கி கூண்டோடு அழித்தனர். அதன் தொடர்ச்சியான இந்திய விமானம் ஒன்றினை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

    அப்போது அந்த விமானத்தில் இருந்த பைலட், அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கி கொண்டார். இதனால் அபிநந்தனை எப்படியாவது பத்திரமாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.

     வீடியோ கான்பரன்ஸ்

    வீடியோ கான்பரன்ஸ்

    இந்நிலையில், பாஜக தொண்டர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாற்றி இருக்கிறார். இது உலகிலேயே மெகா வீடியோ கான்பரன்ஸ் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தாக்குதல் சம்பவத்தை பாஜக அப்பட்டமான அரசியலாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் இப்போது தொண்டர்கள் மத்தியில் மோடி பேசுவது அவசியம்தானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

     அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    முன்னதாக, இந்த வீடியோ கான்பரன்ஸ் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வருக்கு பிரதமர் மோடிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    அதில், "வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும், பிரதமர் மோடி அந்த நிழ்ச்சியை தள்ளி வைக்கவேண்டும். இந்நேரத்தில் தேசத்தில் இருப்பவர்கள் நாம் எல்லோருமே பாகிஸ்தான் வசம் சிக்கி இருக்கும், நம் வீரரை பத்திரமாக மீட்டு வருவதில்தான் சக்தி முழுவதையும் செலவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

     தேர்தல் பிரச்சாரம்

    தேர்தல் பிரச்சாரம்

    அதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் இது பற்றி சொல்லும்போது, "ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் தேசப்பாதுகாப்பு குறித்து கவலையில் உள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவரின் உண்ணாவிரதப் போராட்டத்தையே ஒத்திவைத்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் கட்சியும் தங்களின் செயற்குழு கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டது. ஆனால், பிரதமர் மோடி மட்டும் வாக்கு சாவடியை பலப்படுத்துவதிலும், பாஜக தேர்தல் பிரச்சாரத்திலும் பரபரப்பாக இயங்கி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

    English summary
    Aravind Kejriwal has requested to PM Modi, Postpone Mega Video Conference energy should be spent on getting Pilot Abhinand back
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X