பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் மனநிலை என்ன? மகிழ்ச்சியா? சோகமா? இந்தியா டுடே சர்வேயில் ட்விஸ்ட்
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் விவசாயிகள் பலன் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனரா? இல்லை பலன் கிடைக்காமல் மோசமாக உள்ளனரா? என்பது தொடர்பாக இந்தியா டுடே - சிவோட்டர் சார்பில் மேற்கொண்ட சர்வே முடிவு வெளியாகி உள்ளது. இந்த முடிவு என்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த 2020-21 காலக்கட்டத்தில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய அரசு அந்த சட்டங்களை திரும்ப பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியை நோக்கி கடந்த 13ம் தேதி முதல் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தற்போதும் விவசாயிகள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று 5வது நாளை போராட்டம் எட்டி உள்ளது. இந்த போராட்டம் என்பது மொத்தம் 13 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கூறி நடந்து வருகிறது. அதாவது வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
விவசாயிகளிடம் மத்திய அரசு சார்பில் 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தற்போதைய சூழலை வைத்து கூற வேண்டும் என்றால் இந்த விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்றே கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் விவசாயிகளின் பொருளாதார நிலைமை உயர்ந்துள்ளதா? சரிந்துள்ளதா? என்பது தொடர்பான சர்வே முடிவு வெளியாகி உள்ளது.
அதாவது ‛இந்தியா டுடே' - சி வோட்டர் சார்பில் Mood Of The Nation என்ற பெயரில் இந்தியா முழுவதும் வரும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி மாநில வாரியாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே 2023 டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் ஜனவரி 28 ம் தேதி வரை மொத்தம் 35 ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியைமக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கருத்து கணிப்பின்போது விவசாயிகளின் நிலைமை, பொருளாதார சூழல் பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது. தற்போது விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவு வெளியாகி உள்ளது. அதில் சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்து வருபவர்களில் 33.4 சதவீதம் பேர் 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தங்களின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் எந்த மாற்றமும் இல்லை என கூறி உள்ள நிலையில் 32.5 சதவீதம் பேர் நிலைமை மோசமாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நிலம் இல்லாத விவசாய கூலி தொழிலாளர்களும் பிரதமர் மோடியின் ஆட்சியில் தங்களின் நிலைமை என்ன? என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி 34.6 சதவீதம் பேர் மோடி ஆட்சியில் பொருளாதார நிலை பாதிப்பு அடையவில்லை எனவும், 22 சதவீதம் பேர் நிலைமை மோசமாகி உள்ளதாகவும், 28.6 சதவீதம் பேர் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த சர்வேயின் அடிப்படையில் பார்த்தாில் 34.8 சதவீதத்தினர் தங்களின் பொருளாதாரத்தில் சரிவை சந்தித்துள்ளதாகவும், 32.6 சதவீதம் பேர் தங்களின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் என இந்தியா டுடே - சிவோட்டர் நடத்திய ‛மூட் ஆப் தி நேஷன்' சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications