டச் பண்ணாதீங்க.. "இந்த" நம்பரில் போன் வந்தால் எடுத்துடாதீங்க. மத்திய அரசு புது வார்னிங்.. என்னாச்சு
டெல்லி: தெரியாத நம்பர்களில் இருந்து செல்போன் அழைப்புகள் வந்தால், அதை எடுக்கக்கூடாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.. இதுகுறித்து முக்கிய வார்னிங் ஒன்றையும் பொதுமக்களின் நன்மைக்காக வழங்கியுள்ளது.
நாளுக்கு நாள், ஆன்லைனில் மோசடிகள் அதிகம் அரங்கேறிவருகின்றன.. நாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் உன் மானம் போய் விடும்" என்று மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து கொண்டிருக்கிறார்கள்.

அழைப்புகள்: இதுபோன்ற கும்பல்கள், முதலில் ஆசையை தூண்டிவிட்டுதான், பணம் பறிக்கும் மோசடியில் இறங்குவார்களாம்.. வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ, குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்களாம்..
பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் உள்ள போன் நம்பரை எடுத்து தொடர்பு கொள்ளவும் செய்வார்கள்.. அதனால், அறிமுகம் இல்லாத பெண்களிடம் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று ஏமாற வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் வலியுறுத்தியபடியே உள்ளனர்.
கடும் எச்சரிக்கை: அதேபோல இன்னொரு அறிவிப்பினை போலீசார் வெளியிட்டிருந்தனர்.. அதில், +63 +84,+62, +254,+212,+917 ஆகிய சர்வதேச குறியீடுகளுடன் தொடங்கும் எண்களில் இருந்து வாட்சப் கால் வந்தால் அதை எடுக்கக்கூடாது என்றும், அந்த நம்பரை யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் சைபர் கிரைம் எச்சரித்திருந்தனர்.
நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்கிடு இன் ஆகிய சோஷியல் மீடியாக்களில் நமக்கிருக்கும் தரவுகளை பெற்று, நம்மையே மோசடியில் சிக்கவைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறியிருந்தது..
டி - ஆக்டிவேட்: அதாவது, சம்பந்தப்பட்ட நம்பர்களில் இருந்து தொடர்பு கொள்வோர், நமக்கு பெரிய தொகையில் பரிசு உள்ளது என்று ஆசையை தூண்டுவார்கள். அமோசடி வலையில் சிக்க வைப்பார்கள்.. பணம் தங்கள் கைக்கு வந்ததும், அந்த எண்ணை டிஆக்டிவேட் செய்து செய்துவிடுவார்கள்.. அந்த நம்பரில் இருந்து போன் வந்தால், உடனே நம்பரை பிளாக் செய்துவிட வேண்டும், சைபர் க்ரைம் போலீசாரிடமும் புகார் கொடுக்க வேண்டும் என்றும் அதனால், கவனமாக இருக்கும்படியும் எச்சரித்திருந்தது.
ஸ்பேம் அழைப்பு: இந்நிலையில், மத்திய அரசு இன்னொரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.. மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது அவரிடம், ஸ்பேம் அழைப்பு மற்றும் 'சைபர்' மோசடி (இணையதள குற்றம்) குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். (விளம்பரங்கள் சார்ந்தோ, அல்லது தவறான நபர்களிடம் இருந்தோ வர கூடிய அழைப்புகளுக்குதான் ஸ்பேம் அழைப்புகள் என்பார்கள்)

இதற்கு மத்திய அமைச்சர் பதிலளிக்கும்போது, "செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது. தங்களுக்கு தெரிந்த, அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்.
ப்ளாக் லிஸ்ட்: ஸ்பேம் அழைப்புகள், 'சைபர்' மோசடிகள் போன்றவற்றைத் தடுப்பதற்காக என்னுடைய அமைச்சகம் 'சஞ்சார் சாதி' என்ற புதிய தளத்தினை தொடங்கி இருக்கிறது.. 40 லட்சத்துக்கும் மேலான தவறான சிம் கார்டுகளும், 41 ஆயிரம் தவறான விற்பனை மைய ஏஜெண்டுகளும், அந்த தளத்தில், கருப்பு பட்டியலிட்டு (BLACK LIST) தடை செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார் மத்திய அமைச்சர்.












Click it and Unblock the Notifications