அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வி.. புதுடெல்லியில் வென்ற பாஜக வேட்பாளர்! வித்தியாசம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal Lose) இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை வீழ்த்தி புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார். இந்த பர்வேஷ் வர்மா யார்? அவர் எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் கடந்த 2013 முதல் 2024ம் ஆண்டு வரை ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி தான் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 5ம் தேதி டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது.

Arivind Kejriwal VS Parvesh Verma VS Sandeep Dikshit Who will win in New Delhi assmbly seat today

அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 60.42 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிககவனம் பெற்ற தொகுதி புதுடெல்லியாகும். இந்த தொகுதியில் 2 முன்னாள் முதல்வரின் மகன்கள், அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் உள்ள நட்சத்திர தொகுதிகளில் முதன்மையாக இருப்பது புதுடெல்லி தான். இந்த தொகுதியில் மொத்தம் 56.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த தொகுதியில் தான் முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டுள்ளார். இவர் கடந்த 2013, 2015, 2020 ஆகிய 3 தேர்தல்களில் புதுடெல்லி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று முதல்வரானார். இப்போது 4வது முறையாக அவர் அந்த தொகுதியில் போட்டியிட்டார்.

பாஜக வேட்பாளர்: அதேபோல் புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக பர்வேஷ் வர்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் ஆவார். சாஹிப் சிங் வர்மா டெல்லி முதல்வராக 1996 முதல் 1998 வரை இருந்தார். அவரது மகன் பர்வேஷ் வர்மா பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஹிந்து ஜாட் குடும்பத்தை சேர்ந்தவர். மேற்கு டெல்லி லோக்சபா தொகுதி 2014, 2019 தேர்தலில் வென்று 2 முறை எம்பியாக இருந்தார். இவர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கினார்.

காங்கிரஸ் வேட்பாளர்: அதேபோல் காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப் தீக்ஷித் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் கடந்த 2008 தேர்தலில் ஷீலா தீக்ஷித் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2013ல் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோற்றார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்த தொகுதியில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த காங்கிரஸ் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப் தீக்ஷீத்தை களமிறக்கியது.

கெஜ்ரிவால் தோல்வி: 2 முன்னாள் முதல்வர்களின் மகன்கள் மற்றும் ஒரு முன்னாள் முதல்வர் ஆகியோர் போட்டியிடுவதால் புதுடெல்லி தொகுதியில் வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா தான் முன்னிலை வகித்தார். அதன்பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை பெற்ற நிலையில் கடைசியில் பின்தங்கினார். இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தி பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார். இது அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமின்றி ஆம்ஆத்மி கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா மொத்தம் 30,088 ஓட்டுகள் பெற்றார். அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் பர்வேஷ் வர்மா, 4,089 ஓட்டுகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தி உள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் 4,568 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். இதன்மூலம் புது டெல்லி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலை தொடர்கிறது. அதோடு அரவிந்த் கெஜ்ரிவாலின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி இப்போது பாஜகவின் பர்வேஷ் வர்மாவால் தகர்த்து எறியப்பட்டுள்ளது.

2020 தேர்தல்: 2020 சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 21,697 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 46,758 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் சுனில் குமார் யாதவ் 25,061 ஓட்டுகள் வாங்கியிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ரோமேஜ் சபார்வால் வெறும் 3,220 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார்.

2015 தேர்தல்: ஆம்ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 57,213 ஓட்டுகள் பெற்று 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் நுபுர் சர்மா 25,630 ஓட்டுகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் கிரண் வாலியா 4,781 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார்.

2013 தேர்தல்: இந்த தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் களமிறங்கினார். 44,269 ஓட்டுகள் பெற்றிருந்தார். அவர் தன்னை எதிர்த்து களமிறங்கிய மறைந்த முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்சித்தை 25,864 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். அப்போது முதல்வராக தேர்தலில் களமிறங்கிய ஷீலா தீக்சித் வெறும் 18,405 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் விஜயேந்தர் குப்தா 17,952 ஓட்டுகள் பெற்றிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+