“ஆபரேஷன் சிந்தூர் 2.0.. தீவிரமாக தயாராகி வருகிறோம்”- உறுதி செய்த இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி
டெல்லி: "ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் மீது கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, மே 10 ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில் "ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி எல்லைப் பகுதியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களிடம் பேசிய உபேந்திர திவேதி, "தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் முதல் தூணாக மாறி பொதுமக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு ராணுவ வீரரும் ஒரு குறிப்பிட்ட தரத்தை அடைய வேண்டும். ஜிம்மிற்குச் செல்ல விரும்பினாலும், விளையாட்டுகளை விளையாட விரும்பினாலும், அல்லது சாகச நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பினாலும், அனைவருக்கும் வாய்ப்புகளைத் திறந்து வைத்திருக்கிறோம். பாதுகாப்பு அமைச்சர் நலத்திட்டங்களுக்கான மானியத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தார் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் பேசும்போது, "பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரெய்லர். வெற்றி என்பது நமக்கு ஒரு சிறிய சம்பவம் மட்டுமல்ல, அது ஒரு பழக்கமாகிவிட்டது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது.
இது இந்தியர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது மற்றும் உலகிற்கு பிரம்மோஸின் செயல்திறனை நிரூபித்தது. இந்த நம்பிக்கையைப் பராமரிப்பது இப்போது நமது கூட்டுப் பொறுப்பு. பஹல்காமில் 26 பேரை கொன்ற தாக்குதலைத் தொடர்ந்து, மே மாதம் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் குறிவைத்தன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழிக்க இந்தியாவால் பயன்படுத்தப்பட்டன. இந்தத் திட்டம் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் திறனையும் குறிக்கிறது." எனத் தெரிவித்திருந்தார்.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications