அக்னிபாத் போராட்டம்..மறுபக்கம் ஆள்சேர்ப்பு.. இளைஞர்களுக்கு தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அழைப்பு
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விரைவில் முதல் பேட்ச் ஆள் சேர்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
டெல்லி: இளைஞர்கள் அனைவரும் அக்னி வீரர்களாக இணைய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் விரைவில் அக்னி பாதை திட்டத்தின் கீழ் முதல் பேட்ச் ஆள் சேர்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறாததால் வாய்ப்புகளை இழந்த இளைஞர்களின் நலனுக்காக அரசாங்கம் வயது வரம்பை 23 ஆக அதிகரித்துள்ளது. இது இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது.

இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த புதிய கொள்கையை பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. பீஹார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியாணா, தெலங்கானா என 7 மாநிலங்களிலும் போராட்டங்கள் பரவிவுள்ளது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் விரைவில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதல் பேட்ச் ஆள் சேர்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அனைவரும் அக்னி வீரர்களாக இணைய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறாததால் வாய்ப்புகளை இழந்த இளைஞர்களின் நலனுக்காக அரசாங்கம் வயது வரம்பை 23 ஆக அதிகரித்துள்ளது. இது இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications