ராணுவ துப்பாக்கியின் தோட்டா.. செங்கோட்டை அருகே எப்படி வந்தது? டெல்லி குண்டுவெடிப்பில் திருப்பம்
டெல்லி: கடந்த நவ.10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த தடயவியல் துறையினருக்கு 3 துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்திருக்கின்றன. இவை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கான தோட்டா. அது எப்படி கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
3 தோட்டாக்களும் 9 மி.மீ அளவு கொண்டவை. கண்டெடுக்கப்பட்ட 3 தோட்டாக்களில் 1 காலியாக இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் இந்த தோட்டாக்கள் ரொம்பவே ஈஸியாக கிடைக்கிறது. இந்திய ராணுவத்திலும், காவல்துறையிலும் இந்த தோட்டாக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

ராணுவத்தை பொறுத்தவரை
- Heckler & Koch MP5
- Carl Gustaf SMG
- Carbine 1A
- SMGs
ஆகிய துப்பாக்கிகளில் இந்த தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுவே காவல்துறையை பொறுத்தவரை
- Browning Hi-Power
- Trichy Pistol
- Glock Pistols
போன்ற கை துப்பாக்கிகளில் இந்த தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுடும்போது அதிர்வு குறைவாக இருக்கும் என்பதால், இந்த தோட்டாக்கள் எளிதாக இலக்கை கடுமையாக தாக்கும். அதேபோல விலையும் குறைவு என்பதாலும் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் டெல்லி சம்பவத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் அனைவரின் துப்பாக்கி தோட்டாக்களும் பரிசோதித்து பார்க்கப்பட்டன. அனைத்தும் சரியாக இருந்திருக்கிறது. அப்படியெனில் சம்பவ இடத்தில் கிடைத்த தோட்டாக்கள் யாருடையது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
செங்கோட்டை மெட்ரோ நிலைய வாயில் எண் 1 அருகே கார் வெடிப்பு நடந்திருக்கிறது. இந்த வெடிப்பு தீவிரவாத சதி செயல் என்று மத்திய அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது காரை ஓட்டிக்கொண்டு வந்த டாக்டர் உமர் நபி, தீவிரவாதியாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்திருக்கிறது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் டாக்டர் உமர் நபியின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. இருப்பினும் சிதைந்த உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ, உமர் நபி தாயாரின் டிஎன்ஏ உடன் ஒத்து போகிறது.
அதேபோல சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில், வெடித்து சிதறிய காரில் உயர் ரக வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது அமோனியம் நைட்ரேட்டாக இருக்கலாம் என்றும், மொத்தம் 30-40 கிலோ இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications