டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் அரசை கவிழ்க்க பாஜக சதி? 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 25 கோடி பேரம்?
டெல்லி: தமது டெல்லி அரசை கவிழ்ப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 25 கோடி தருவதாக பாஜக பேரம் பேசியிருப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு 2-வது முறையாக ஆட்சியில் நீடித்து வருகிறது. டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 67 இடங்களில் வென்று முதல் முறையாக டெல்லி ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் 8 இடங்களை வென்ற பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலும் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாஜக தரப்பில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனர். அப்போது, கெஜ்ரிவாலை விரைவில் கைது செய்து விடுவோம். கெஜ்ரிவால் கைதுக்குப் பின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்துவிடுவோம். தற்போது வரை 21 எம்.எல்.ஏக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமும் பேசுவோம். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்த்துவிடுவோம். அதற்கு பிறகு நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள். பாஜக சார்பாக தேர்தலிலேயே போட்டியிடலாம். உங்களுக்கு ரூ. 25 கோடி தரப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் 21 எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டதாக கூறியிருக்கின்றனர். பாஜகவினர் தொடர்பு கொண்ட 7 எம்.எல்.ஏக்களும் பேரத்துக்கு பணிய முடியாது என தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க 9 ஆண்டுகளாக பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் பாஜகவால் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. இப்போது என்னை கைது செய்தாவது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறது. ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications