செம ஹேப்பி.. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில், கேஜ்ரிவால், ஸ்மிருதி இரானி மகன்கள் அசத்தல்
டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரின் மகன்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள், கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை நடைபெற்றன. இதற்கான ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி விிதம் 83.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது. காசியாபாத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா மற்றும் முசாபர்நகரை சேர்ந்த கரிஷ்மா அரோரா ஆகியோர் தலா 499 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

இந்த தேர்வில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மகன் புல்கித் கேஜ்ரிவால் 96.4% மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார். அவர் நொய்டாவிலுள்ள பள்ளியில் படித்து வந்தார். 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் புல்கித் அசத்தியிருந்தார். அப்போது, 10 'சிஜிபிஏ' (Cumulative Grade Point Average) பெற்று அசத்தினார்.
அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி, சுனிதா கேஜ்ரிவால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கடவுளின் கருணையால், நலம் விரும்பிகளின் ஆசியால், எனது மகன் சிபிஎஸ்இ 12வது, தேர்வில், 96.4 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
Ok saying it out loud— proud of my son Zohr..not only did he come back with a bronze medal from the World Kempo Championship also scored well in 12 th boards. Best of 4– 91% .. special yahoo for 94% in economics.. Maaf karna ,today I’m just a gloating Mom🙏
— Chowkidar Smriti Z Irani (@smritiirani) 2 May 2019
இதேபோல மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட ட்வீட்டில், எனது மகன் ஜோக்ர்ரை, நினைத்து பெருமைப்படுகிறேன். உலக கெம்போ சாம்பியன்ஷிப்பில், வெண்கல பதக்கத்தை வென்று வந்தது மட்டுமின்றி, 12வது வகுப்பு தேர்வில், 91% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பொருளாதாரத்தில் 94% மதிப்பெண் பெற்றுள்ளதற்கு சிறப்பு உற்சாகம். இன்று நான் மகிழ்ச்சியில் திளைக்கும் வெறும் அம்மா மட்டும்தான். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications