கதறி அழுத கெஜ்ரிவால்.. "ஆம் ஆத்மியை முடக்க மோடி, அமித்ஷா சதி.." தீர்ப்பை கேட்டு கண்ணீர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய மதுபானக் கொள்கை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார். தான் நிரபராதி என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, கடந்த 2021ம் ஆண்டில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்தது. அதற்கு முன்பு வரை அரசே மதுபானங்களை விற்று வந்த நிலையில், அதை மாற்றி தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதற்கு தனியாக லைசன்ஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டது.

Arvind Kejriwal Breaks Down in delhi After Court Clears Him in Delhi Excise Policy Case verdict

இருப்பினும், இதில் ஊழல் நடந்தாக புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரிய தலைவலியாக மாறியது. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தல் சமயத்திலும் இது ஆம் ஆத்மிக்கு பெரிய பின்னடைவாக மாறியது.

இதற்கிடையே இந்த டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியாவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைக் கேட்டவுடன் மாஜி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார். கடின உழைப்பின் மூலமும் நேர்மையின் மூலமாகவே மக்கள் நம்பிக்கையைச் சம்பாதித்ததாகவும் அதற்குக் கிடைத்த வெற்றி தான் இது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு ஆட்சியையும் கவிழ்க்காமல் மக்களுக்குச் சேவை செய்யுமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "நீதிமன்றத் தீர்ப்பு தான் நான் நிரபராதி என்பதற்கு ஆதாரம். உண்மை வெல்லும்," என கெஜ்ரிவால் கூறினார். அரசியலமைப்பைக் கேலிப்பொருளாக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். ஊழல், வேலையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பாஜக ஏன் முயல்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

கெஜ்ரிவாலுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் தேவை என்றும், ஆதாரமின்றி இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+