அமித்ஷாவே அடுத்த பிரதமர்- அத்தனை பேரையும் ஓரங்கட்டிய மோடி- பாஜகவில் மீண்டும் வெடி வைத்த கெஜ்ரிவால்!
டெல்லி: லோக்சபா தேர்தல் களத்தில் பாஜகவுக்குள் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பற்ற வைத்துக் கொண்டே இருக்கும் நெருப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து ஜாமீனில் விடுதலையானார் கெஜ்ரிவால்.

பாஜகவுக்கு அதிர்ச்சி: சிறையில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், லோக்சபா தேர்தல் களத்தின் ஒட்டுமொத்த போக்கையே திசைதிருப்பிவிட்டார். இதனை பாஜகவே எதிர்பார்க்கவில்லைதான். ஆம், பிரதமர் மோடிக்கு 73 வயதாகிறது.. இன்னும் 2 ஆண்டுகள்தான் பிரதமராக இருப்பார். 75 வயதுக்குப் பின்னர் அமித்ஷாதான் நாட்டின் பிரதமர் என ஒரே போடாக கெஜ்ரிவால் போட்டார். அவ்வளவுதான் ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் அலறிப் போய், அப்படி எல்லாம் இல்லை.. 5 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர் .. மோடிதான் பிரதமர் என கூச்சலிட்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் மோடி என்ற பிம்பத்தை முன்வைத்து பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். கெஜ்ரிவாலோ அந்த பிம்பத்தையே தகர்த்து எறியும் வகையில் பேசியது இன்னமும் அடங்கவில்லை.
பாஜகவும் 75 வயது வரம்பும்: தற்போது "இந்தியா டுடே" டிவி சேனலுக்கு அளித்த பேட்டியிலும் இதனை விவரித்து பேசியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அப்பேட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: 2019-ம் ஆண்டு அமித்ஷா பேசுகையில் 75 வயதாகும் அனைத்து பாஜக தலைவர்களுக்கும் கட்டாயம் ஓய்வுதான் தரப்படும். இதில் எந்த சமரசத்துக்கும் இடமே இல்லை என்றார். 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக எனக்கும் 75 வயது லிமிட் ரூல் பொருந்தும் என்றார். பாஜகவில் 75 வயதாகிவிட்ட யாருக்கும் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை. அரசு பதவிகளிலும் தற்போது இல்லை.
அத்வானி டூ சுமித்ரா மகாஜன்: 75 வயது லிமிட் என்ற விதிப்படி அத்வானி ஓய்வுக்கு அனுப்பப்பட்டார்.. முரளி மனோகர் ஜோஷி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுமித்ரா மகாஜன் ராஜினாமா செய்யப்பட்டு ஓய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆகையால் பாஜகவினர் ஒவ்வொருவருமே 75 வயது வரம்பை பின்பற்றுவார்கள் என நினைக்கிறேன்.
இத்தனை பேரை ஓரம் கட்டிய மோடி: இப்போது பாஜகவுக்குள் அருவறுப்பான வகையில் மோடிக்கு அடுத்தது யார் என்கிற யுத்தமே நடக்கிறது. பிரதமர் மோடியோ, சிவராஜ் சிங் சவுகானை ஓரம் கட்டிவிட்டார். வசுந்தர ராஜே சிந்தியா அத்தியாயத்தை முடித்து வைத்துவிட்டார். மனோகர் லால் கட்டாரின் அத்தியாயத்துக்கும் முடிவுரை எழுதிவிட்டார். ரமன்சிங்கும் இப்போது ஆக்டிவ்வாக இல்லை. யோகி ஆதித்யநாத் மட்டும் விதிவிலக்காக இருக்கப் போவது இல்லை. அவரை ஓரம் கட்டப் போகிறார்கள். தமக்குப் பின்னர் அமித்ஷாதான் பிரதமராக வேண்டும் என்பதற்காக அத்தனை தலைவர்களையும் ஓரம் கட்டிவிட்டார் மோடி. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பாஜக திட்டவட்ட மறுப்பு: ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்தை மீண்டும் பாஜக தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக பாஜக தலைவர்கள் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலோ, ஆம் ஆத்மி தலைவர்களோ 'இந்தியா' கூட்டணி தலைவர்களோ பிரதமர் மோடி ஓய்வு பெறுவார் என மகிழ்ச்சியில் இருக்க வேண்டாம்.. 75 வயது வரம்பு என்பது பாஜகவில் எழுதப்பட்ட விதி ஒன்றும் இல்லை. ஆகையால் பிரதமர் மோடியே அடுத்த பிரதமர்.. ஐந்து ஆண்டுகளுக்கும் மோடியே பிரதமர் என்கின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications