சிறையில் இருந்து வந்ததும் கெஜ்ரிவால் செய்யப்போகும் முதல் வேலை! மெகா பிளான் வைத்திருக்கும் ஆம் ஆத்மி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும், நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.

டெல்லியில் புதிய மதுபான கொள்கை வகுப்பதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

Arvind Kejriwal could have been arrested earlier or after Supreme Court said on timing ED Action

ஏற்கனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் எனக்கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்று வருகின்றன. கெஜ்ரிவாலின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் பிரசாரம் என்பது அடிப்படையில் உரிமையில் வராது என்றும் இதற்கு முன்பாக இப்படி யாருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது இல்லை எனவும் அமலாக்கத்துறை கூறியிருந்தது. இந்த நிலையில் தான், அமலாக்கத்துறை வாதங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.

அதாவது 21 நாட்கள் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 02 ஆம் தெதி கெஜ்ரிவால் சரண் அடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இடைக்கால ஜாமீனில் இருக்கும் காலத்தில் கெஜ்ரிவால் தனது அலுவலகத்திற்கு செல்லவோ.. கோப்புகளில் கையெழுத்திடவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்தது. உச்ச நீதிமன்றம் கூறுகையில், 'அமலாக்கத்துறை இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2022 ல் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த ஆண்டு மார்ச் 21ல் கைது செய்யப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கெஜ்ரிவால் வெளியே இருந்துள்ளார். கெஜ்ரிவாலை முன்பாகவோ அல்லது தேர்தலுக்கு பிறகோ கைது செய்து இருக்கலாம்.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எதுவாக இருந்தாலும் சரி... 21 நாட்கள் எங்கு இருந்தாலும் பெரிய அளவில் வித்தியாசம் ஏற்படப்போவது இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக உள்ளார். தேசிய கட்சியின் தலைவராகவும் உள்ளார். தீவிரமான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவரது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு கிரிமினல் பின்னணியும் இல்லை. சமூகத்திற்கு அச்சுறுத்தலும் அவரால் இல்லை" என்று தெரிவித்தது.

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கொடுத்ததை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சவுரவ் பரத்வாஜ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிசயத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி சொன்னார்.

கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும், நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+