"பாஜகவினர் நமது சகோதரர்கள்.." ஜெயிலுக்கு போன பிறகு கெஜ்ரிவாலின் முதல் மெசேஜ் இதுதான்! நோட் பண்ணுங்க
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிறையில் இருந்து அனுப்பிய மெசேஜ்ஜில் ஒரு பகுதி இணையத்தில் பெரும் விவாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் வியாழக்கிழமை கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். . சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை இன்று அவரது மனைவியும் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார்.

சிறையில் இருந்தபடி மக்களுக்கு கெஜ்ரிவால் அளித்த செய்தியை அவரது மனைவி சுனிதா வாசித்தார். அனைவருக்கும் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற கெஜ்ரிவால் யாரையும் வெறுக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். கெஜ்ரிவாலின் மெசேஜ் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பாஜக சகோதர சகோதரிகள்: இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் சுனிதா, "மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுங்கள். பாஜகவில் உள்ளவர்களையும் கூட வெறுக்காதீர்கள். அவர்கள் அனைவரும் கூட நமது சகோதர சகோதரிகள் தான்" என்று கெஜ்ரிவால் கூறியதாக அவரது மனைவி சுனிதா தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு அனுப்பிய செய்தியில், "இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பல சக்திகள் நாட்டை பலவீனப்படுத்தி வருகின்றன. அவரை சிறைக்குள் வைத்திருக்க நமது நாட்டில் எந்த ஜெயிலும் இல்லை. நான் விரைவில் வெளியே வந்து எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன், தகுதியான பெண்களுக்கு மாதம் ₹ 1,000 வழங்கும் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.
சிறையில் இருந்தாலும் மக்கள் பணி: நான் சிறைக்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாட்டுக்குச் சேவை செய்வதற்கே அர்ப்பணிக்கிறேன். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நான் ஒருபோதும் போராட்டத்தைக் கண்டு அஞ்சியதே இல்லை. எதிர்காலத்திலும் பெரிய சவால்களைச் சந்திக்க நேரிடும் என்பதும் எனக்குத் தெரியும். அதற்கும் தயாராகவே உள்ளேன்.
உலகின் வலிமையான மற்றும் சிறந்த நாடாக இந்தியா வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை எதிராக இருக்கும் அனைவரையும் எதிர்த்துப் போராடா வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார். கெஜ்ரிவால் அனுப்பிய இந்த மெசேஜ்ஜை அவரது மனைவி சுனிதா வாசித்துக் காட்டினார்.
கிளம்பிய விமர்சனம்: பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் சிறைக்குச் சென்றதும் இப்படி அவர்களையே சகோதர சகோதரிகள் என்று சொல்லிவிட்டாரே என ஒரு தரப்பினர் சாடுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் அவர் பாஜக சித்தாந்தத்தைத் தான் எதிர்க்கிறார். அந்த எதிர்ப்பு தொடரும் என்றும் பாஜக தொண்டர்களை இப்படி அழைத்ததில் தவறு இல்லை எனக் கூறி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 2021-22 காலகட்டத்தில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், அது சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. டெல்லி ஆளுநர் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்ட நிலையில், அமலாக்கத் துறை இதைக் கையில் எடுத்தது. "சவுத் குரூப்" என்ற லாபி க்ரூப் விஜய் நாயர் என்பவர் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி மேல் லஞ்சம் கொடுத்துள்ளனர் என்றும் அதை அவர்கள் பஞ்சாப் மற்றும் கோவா தேர்தலுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதே புகாரும்.
இந்த வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கவிதா, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications