டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. மதுபான கொள்கை வழக்கில் அமலாக்க துறை அதிரடி
டெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் தான் ஏற்கனவே அம்மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.
கைது: இதையடுத்து தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட், கெஜ்ரிவாலை கைது செய்யத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே இப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
கெஜ்ரிவால் இல்லத்தில் இருக்கும் அமலாக்கத் துறை டீமில் இப்போது 12 அதிகாரிகள் உள்ளதாகவும், அவர்கள் தேடுதல் வாரண்டுடன் அங்கே சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய பல சம்மன்களை மிஸ் செய்து இருந்தார். கடந்த திங்கள்கிழமை டெல்லி ஜல் போர்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அதிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதே மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இப்போது டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். கெஜ்ரிவால் வீட்டில் சில மணி நேரம் சோதனை நடந்த நிலையில், அமலாக்கத் துறை இப்போது அவரை கைது செய்துள்ளது.
ஆம் ஆத்மி போராட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது ஒரு பக்கம் இருக்க கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக சாடி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க கெஜ்ரிவாலை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்க துறை திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு மதுபான கொள்கை விவகாரம் குறித்து காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்க துறை திட்டமிட்டுள்ளது. அதேநேரம் என்ன தான் கைது செய்யப்பட்டாலும் கெஜ்ரிவால் தான் முதல்வர் பதவியில் தொடர்வார் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், இதுவரை கெஜ்ரிவால் எம்பி சஞ்சய் சிங் மற்றும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.என மூன்று ஆம் ஆத்மி தலைவர்கவள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கேசிஆர் மகளுமான கவிதாவும் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications