NRC: டெல்லி பாஜக தலைவர் முதல் ஆளாக டெல்லியை விட்டு வெளியேறும் நிலை வரும் : அரவிந்த் கெஜ்ரிவால்
Recommended Video
டெல்லி: டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி டெல்லியில் இருந்து முதல் ஆளாக வெளியேற வேண்டி வரும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நாட்டில் எங்கும் இல்லாத ஒன்றாக அஸ்ஸாம் மாநிலத்தில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்களை தடுப்பதற்காக இப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
|
தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு
அண்மையில் அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 19லட்சம் பேர் பெயர்கள் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க தீர்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியிலும் என்ஆர்சி
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தை போல் மேற்கு வங்கம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் நீடிக்கப்பட வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஊடுருவல்காரர்கள் தாக்கு
டெல்லி மாநில பாஜக தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி அவ்வப்போது அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசிவந்த நிலையில், தெற்கு டெல்லியில் ஒரு செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு ஊடுருவல்காரர்கள் காரணம் என விமர்சித்து இருந்தார்.

டெல்லியை விட்டு வெளியேறணும்
இதற்கு பதிலடியாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி (பீகாரில் பிறந்தவர்) முதல் ஆளாக டெல்லியில் இருந்து வெளியேற வேண்டி வரும் என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications