சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக அனுமன் கோயில் சென்ற கெஜ்ரிவால்! அடுத்து என்ன பிளான்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், முதல் வேலையாக இன்று அனுமன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி அரசு டெல்லியில் புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்தது. இருப்பினும், இதில் முறைகேடு நடந்ததாகவும் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. டெல்லி துணைநிலை ஆளுநரிடம் பாஜகவினர் இது தொடர்பாகப் புகாரும் அளித்தனர்.

அதன் பின்னரே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். அமலாக்கத் துறை இந்த வழக்கில் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கெஜ்ரிவால்: குறிப்பாக டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் தான் கைதாகிப் பல மாதங்களுக்கு மேலாகச் சிறையில் இருந்து வருகிறார். அதே வழக்கில் தான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைதானார். இதற்கிடையே லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்ய ஜாமீன் வழங்கக் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
அனுமன் கோயில்: இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. வரும் ஜூன் 1ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் நேற்றிரவு சிறையில் இருந்து வெளியே வந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த உடனேயே, கெஜ்ரிவால் தனது தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் செல்ல உள்ளதாகக் கூறினார்.
அதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அவர் டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் மனைவி சுனிதாவுடன் சாமி தரிசனம் செய்தார்.. அப்போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் இருந்தார். சாமி தரிசனத்தைத் தொடர்ந்து கெஜ்ரிவால் பேரணியாக ஆம் ஆத்மி அலுவலகத்திற்குச் செல்கிறார். மதியம் 1 மணிக்கு ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.. பிறகு மாலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் தெற்கு டெல்லியில் நடைபெறும் ரோட் ஷோவிலும் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்துக்கே போகக்கூடாது.. சுப்ரீம் கோர்ட் விதித்த 5 நிபந்தனைகள்!
பின்னணி என்ன: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் தான் அவருக்கு ஜூன் 1ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. கெஜ்ரிவால் ஜூன் 2ஆம் தேதி சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது ஆம் ஆத்மி உட்பட இந்தியா கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆசீர்வாதம்: திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் தனது கட்சி தொண்டர்களிடையே பேசுகையில், "எனக்கு அனுமன் ஆசீர்வாதம் எப்போதும் இருந்துள்ளது. அந்த ஹனுமானின் ஆசீர்வாதத்தாலும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும்தான் நான் இன்று வெளியே வந்துள்ளேன்.. உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆசீர்வாதம் தான் நான் வெளியே வர காரணமாக இருந்துள்ளது.
இதற்காக நான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.. அவர்களால் தான் நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். இந்தத் தேர்தலில் சர்வாதிகாரத்தில் இருந்து நாம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்" என்றும் கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications