ஜாமீனில் வந்தாலும் கெஜ்ரிவால் முதல்வராக செயல்பட முடியாது.. உச்சநீதிமன்றம் வைத்த பெரிய ட்விஸ்ட்
டெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வர உள்ளார். ஆனாலும் கூட அவரால் முழுமையாக முதல்வராக செயல்பட முடியாது. ஆவணங்களால் கையெழுத்திட முடியாது. இதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு தான் காரணம். அப்படி என்ன உத்தரவு? வாங்க பார்க்கலாம்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார். ஊழலுக்கு எதிராக போராடிய அன்னா ஹசாரேவிடம் இருந்து பிரிந்து வந்து அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை தொடங்கினார். ஆனால் தற்போது கெஜ்ரிவால் கட்சி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகிறது.

அதாவது டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கை வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதில் ஊழல் புகார் எழுந்ததையடுத்து அந்த கொள்கை வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தொடங்கியது. அப்போது டெல்லியில் கலால்துறை அமைச்சராக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இருந்தார்.
இவரது வீடு, அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் கைது செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து சென்னை திகார் சிறையில் அடைத்தது. இந்த கைது நடவடிக்கை என்பது ஏப்ரல் 1ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதன்பிறகு அதன்பிறகு லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியே வந்தவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு இடைக்கால ஜாமீன் முடிந்தபாது ஜூன் தொடக்கத்தில் சிறையில் சிறையில் சரணடைந்தார். இதற்கிடையே தான் சஞ்சய் சிங் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் அடுத்தடுத்து ஜாமீனில் வெளியே வந்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை வழக்கில் கடந்த மாதம் ஜாமீன் கிடைத்த நிலையில் உடனடியாக சிபிஐ அவரை கைது செய்தது. இதனால் அவரால் வெளியே வர முடியவில்லை.
இதையடுத்து சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரியும், சிபிஐ கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் சிபிஐ வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். இதனால் ஆம்ஆத்மி கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும் கூட இந்த ஜாமீன் என்பது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சிக்கு முழு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.
ஏனென்றால்உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீனால் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் கூட முழுமையாக அரவிந்த் கெஜ்ரிவாலால் முதல்வராக செயல்பட முடியாது. இதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்றம் விதித்த கண்டிஷன்கள் தான். அதாவது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் முக்கியமான நிபந்தனைகளை விதித்தது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் பாண்ட் செலுத்த வேண்டும். டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக எதுவும் பேசக்கூடாது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக பிற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தது.
இவை எல்லாவற்றும் மேலாக ஒன்று தான் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள முதல்வர் அலுவலகம் அல்லது தலைமை செயலகத்துக்குள் நுழையக்கூடாது. அரசு சார்ந்த ஆவணங்களில் கையெழுத்திடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கண்டிஷன்கள் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி வைத்தியம்அளிக்கும் வகையில் உள்ளது. இதனால் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தாலும் கூட முதல்வர் அலுவலகம் சென்று கோப்புகளில் கையெழுத்திட முடியாது என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலால் முழுமையாக முதல்வராக செயல்பட முடியாத நிலை உள்ளது. மாறாக அவர் பெயரளவுக்கு மட்டும் முதல்வராக வலம் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications