ரூ 2000 நோட்டு வாபஸ் விடுங்க.. இந்த ஜீரோ ரூபாய் நோட்டு கூட இந்தியாவில் இருந்துச்சு! எதுக்கு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரூ.2000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாளாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நமது நாட்டில் ஜீரோ ரூபாய் நோட்டுகள் இருந்தது உங்களுக்குத் தெரியுமா.. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த 2016இல் பணமதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியான சமயத்தில் ரொக்கத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. அப்போது ரொக்கம் தட்டுப்பாட்டைச் சமாளிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 As people rush to banks to change Rs 2000, Do you know about Zero rupee notes

இருப்பினும், பெரிய தொகை என்பதால் 2000 ரூபாய் நோட்டுகளுக்குச் சில்லறை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்தது. மற்றொரு புறம் ரிசர்வ் வங்கியும் மெல்ல 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திவிட்டது.

ரூ.2000 நோட்டுகள்: ஏடிஎம் மெஷன்களிலும் ரூ.2000 நோட்டுகள் நீக்கப்பட்டன. இதனால் அப்போதே 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல்கள் உலா வரத் தொடங்கின. இருப்பினும், இதற்கு ரிசர்வ் வங்கி பல வித காரணங்களைக் கூறியது. மேலும், மத்திய அரசும் அப்படியொரு திட்டம் இல்லை என்றே கூறியது. இந்தச் சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு 2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதற்காக சில கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தது. செப். 30க்குள் அனைவரும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த சில நாட்களாக பல்வேறு நிறுவனங்களுக்கும் ரூ.2000 நோட்டுகளை வாங்க மாட்டோம் என அறிவித்தன. இதனால் பொதுமக்கள் தங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் முகாமிட்டு வருகின்றனர்.

 As people rush to banks to change Rs 2000, Do you know about Zero rupee notes

ஜீரோ ரூபாய் நோட்டு: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது இப்படிப் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்க உங்களுக்கு இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் குறித்துத் தெரியுமா. ஜீரோ ரூபாய் ஏதோ வெளிநாட்டில் வந்தது என நினைக்க வேண்டாம். இந்த ஜீரோ ரூபாய் நோட்டு நமது நாட்டில் தான் வந்தது தெரியுமா.. இந்த ஜீரோ ரூபாய் நோட்டு என்பது யாரோ விளையாட்டிற்கு அடித்த நோட்டும் இல்லை. அதற்கு முக்கியமான பலனும் இருக்கவே செய்கிறது.

இப்போதும் கூட சுமார் 30 லட்சம் ஜீரோ ரூபாய் நோட்டுகள் மக்களிடம் உள்ளதாம். 1 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில், அதென்ன ஜீரோ ரூபாய் நோட்டு எனக் கேட்கிறார்களா.. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்தியாவில் ஊழல் தான் மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. ஊழல் காரணமாக மட்டும் நாம் ஒரு சில ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டோம் என்றே கூட சொல்லலாம். அந்தளவுக்கு எல்லா பக்கமும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது.

​யார்: சென்னையைச் சேர்ந்த 5th பில்லர் என்ற தன்னார்வ அமைப்பு இந்த ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையில் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் பார்க்க அப்போது புழக்கத்தில் இருந்த 50 ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கும். ஊழல், லஞ்சத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த இதை வெளியிட்டனர். இதை அப்போது பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்து பொது இடங்களிலும் வைத்து விநியோகம் செய்துள்ளனர்.

யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் அவர்களுக்கு லஞ்சப் பணத்தைத் தராமல் அதற்குப் பதிலாக இந்த ரூபாய் நோட்டைக் கொடுக்கலாம் என்றும் கூறினார்கள். அந்த ரூபாய் நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பது இருக்க வேண்டிய இடத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை அறவே ஒழிப்போம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், யாராவது லஞ்சம் கேட்டால் இந்த நோட்டைக் கொடுத்துவிட்டு புகார் அளிக்கவும் என்றும் அதில் அச்சிடப்பட்டு இருந்தது.

 As people rush to banks to change Rs 2000, Do you know about Zero rupee notes

லஞ்சம் வாங்க மாட்டேன்: ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி அளிக்கும் இடத்தில் அதற்குப் பதிலாக "நான் லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதை 50 ரூபாய்க்குப் பதிலாக யாராவது கொடுத்து ஏமாற்ற வாய்ப்பு இருந்ததால்.. இதை வழக்கமான நோட்டுகளுக்குப் பதிலாகச் சற்று பெரியதாகவே அச்சடித்து இருந்தனர். ரூபாய் நோட்டுகளைப் போல இருந்தாலும் அதன் காகிதங்கள் வழக்கமானதாகவே இருந்தது.

இந்த ஜீரோ ரூபாய் நோட்டில் லஞ்சம் வாங்குவோருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் விளக்கி இருந்தனர். உள்ளே இருப்பதை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக யாரையும் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகளை மடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்தியாவில் பொதுவாக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கியே அச்சடிக்கும். ஆனால், இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை. மாறாக 5th பில்லர் அமைப்பே அச்சடித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+