21 மாநிலங்கள்.. 102 தொகுதிகளில் ஏப்.19 முதற்கட்ட தேர்தல்! இறுதிக்கட்ட பரப்புரையில் தலைவர்கள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, இன்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

As the first phase of election in 102 constituencies is to be held on April 19 political leaders are actively lobbying

அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில், சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நாகினா, மொராதாபாத், ராம்பூர் மற்றும் பிலிபித் ஆகிய தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் கூச்பெஹார், அலிபுர்துவார்ஸ் மற்றும் ஜல்பைகுரி ஆகிய இடங்களிலும் ஆகிய தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் ராம்டெக், நாக்பூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர் மற்றும் சந்திராபூர் தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இறுதி கட்ட பிரசாரம் என்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. பாஜகவை பொறுத்த அளவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் மற்றும் திரிபுராவில் பிரசாரம் மேற்கொள்கிறார். அசாமில் அஸ்ஸாம் கண பரிஷத்தின் (ஏஜிபி) பானி பூஷன் சவுத்ரி, பார்பெட்டாவில் என்டிஏ சார்பில் போட்டியிடுகிறார். இவருக்காக பிரதமர் இன்று வாக்குகளை சேகரிக்கிறார்.

அதேபோல திரிபுராவின் அகர்தலாவில் நடைபெறும் பேரணியிலும், அஸ்ஸாமின் நல்பாரியிலும் இன்று நடைபெறும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். காங்கிரஸை் பொறுத்த அளவில், ராகுல் காந்தி இன்று கர்நாடகாவின் மாண்டியா மற்றும் கோலார் என இரண்டு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+