ராகுல்காந்தியா? அப்படின்னா யாரு? எனக்கு அவரை தெரியாது... ஓவைசி செம்ம கலாய்
டெல்லி: ராகுல் காந்தி என்றால் யாரு? அவரை எனக்கு தெரியாதே என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி கிண்டலடித்துள்ளார்.
உ.பி. சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 100 இடங்களில் போட்டியிட உள்ளது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் ஓவைசி கட்சியுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார் அகிலேஷ்.
தெலுங்கானாவை தளமாகக் கொண்ட ஓவைசி கட்சி மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம் என பல மாநிலங்களின் தேர்தல்களை எதிர்கொள்கிறது. முஸ்லிம்களுக்கான ஒரு அகில இந்திய கட்சியாக ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி உருவெடுக்க முயற்சிக்கிறது. ஆனால் ஓவைசியின் இந்த முயற்சிகள் பாஜகவுக்குதான் சாதகமாக இருக்கிறது என்பது அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு.

ஓவைசி விளக்கம்
இதனை திட்டவட்டமாக ஓவைசி மறுத்தும் வருகிறது. முஸ்லிம்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில்தான் மஜ்லிஸ் கட்சி தேர்தல் களத்தை எதிர்கொள்கிறது; முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதுதான் எங்களது நோக்கம் என பலமுறை விளக்கம் கொடுத்திருந்தார் ஓவைசி. ஆனாலும் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஓவைசியை விமர்சித்தே வருகின்றன.

யாருங்க ராகுல் காந்தி?
இதனிடையே ஆஜ்தக் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஓவைசி பேசியதாவது: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை காங்கிரஸ் இப்போது பாஜகவின் பி டீம் என முத்திரை குத்துகிறது. எனக்கு ராகுல் காந்தி என்பவரை தெரியாது. ராகுல் காந்தி என்பவர் யார்? உங்களுக்கு ராகுல் காந்தியை தெரிந்திருந்தா எனக்கும் சொல்லுங்கள்.

பாஜக பி டீம் விமர்சனம்
எங்களையும் இதேபோல் பாஜகவின் பி டீம் என முத்திரை குத்தினர். ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் எங்களை பி டீம் என முத்திரை குத்தினர். கோவா சட்டசபை தேர்தலை காங்கிரஸும் திரிணாமுல் காங்கிரஸும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் பிற மாநில தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும்.

காங். சிதறப் போகிறது
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிதறிவிடும். எங்களது மஜ்லிஸ் கட்சி உரிய நேரத்தில் தமது வலிமையை காட்டத்தான் போகிறது. அப்போதுதான் எங்களைப் பற்றி தெரியும். இவ்வாறு ஓவைசி கூறினார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications