இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா? தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.. நீதிபதி சொன்ன பாயிண்ட்
டெல்லி: ஆசியக்கோப்பை டி20 போட்டியில் வரும் 14ம் தேதி துபாயில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கு தடைக்கோரி பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக நாளை விசாரிக்க வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டப்படி நடைபெற உள்ளது.
ஆசிய நாடுகள் இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த, 2023ம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 போட்டியாக தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் போட்டியில் இந்தியா வெற்றி
அதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்னில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியா - பாக்., போட்டிக்கு தடை கோரி மனு
இந்தியா தனது 2 லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி வரும் 14ம் தேதி துபாய் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் பாகிஸ்தானுடன், இந்தியா கிரிக்கெட் விளையாடுவது நாட்டின் நலனுக்கு எதிரானதாக உள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் உடனான மோதலில் மரணமைடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் மக்களின் உயிர் தியாகத்தை குறைத்து மதிப்பிடுவது போல் அமைந்துள்ளது. இதனால் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்.
அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை
மேலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி தொடர்பானதை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். இதற்காக பிசிசிஐ-யைமத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து தேசிய விளையாட்ட நிர்வாக சட்டம் 2025ன் கீழ் செயல்படுவதை உறுதி செய்வதற்கான வழிக்காட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் நாளை இந்த மனுவை பட்டியலிட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
ஏற்க மறுத்த நீதிபதி
மனுதாரரின் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதி ஜேகே மகேஷ்வரி ஏற்க மறுத்துவிட்டார். அப்போது அவர் வழக்கில் தலையிட மறுத்ததோடு அவசர வழக்காக ஏற்க மறுத்துவிட்டார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications