பாஜக vs "இந்தியா" கூட்டணி செமிபைனல்-வெல்வது யார்? தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்- ஃபுல் டேட்டா!
டெல்லி: தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணயம் அறிவித்துள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கு முந்தைய செமி பைனல் ஆட்டம் போல, 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் 5 மாநிலங்கள் குறித்த விவரம்:
தெலுங்கானா: இம்மாநிலத்த்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக பிஆர்எஸ் கட்சி உள்ளது. இங்கு காங்கிரஸ், பாஜக களத்தில் நிற்கின்றன. 2018 சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 88 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் பாஜக 3 இடத்திலும் வென்றது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 7 இடங்களில் வென்றது. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்களி. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. பாஜகதான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இம்மாநில சட்டசபையில் காங்கிரஸுக்கு 71, பாஜகவுக்கு 14 எம்.எல்.ஏக்கள் உள்ளன, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்.
மத்திய பிரதேசம்: இம்மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 115 இடங்கள். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக ஆட்சியில் உள்ளது. 2018 சட்டசபை தேர்தலில் பாஜக 109; காங்கிரஸ் 114 இடங்களில் வென்றது. தற்போது ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளது. மத்திய பிரதேச முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார்.
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 101 இடங்கள்தேவை. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இங்கும் பாஜக, ஆம் ஆத்மி களத்தில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களிலும் பாஜக 73 இடங்களிலும் வென்றன. இம்மாநில முதல்வராக அசோக் கெலா உள்ளார்.
மிசோரம்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். இம்மாநிலத்தில் மாநில கட்சிகளுடன் பாஜக ஆட்சியில் உள்ளது. முதல்வராக ஜோரம்தங்கா இருந்து வருகிறார். 2018 தேர்தலில் எம்.என்.எப். 27 இடங்களில் வென்றது. இங்கும் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை களத்தில் உள்ளன.












Click it and Unblock the Notifications