ககன்யான் திட்டம்.. விண்வெளிக்கு பறக்கும் சென்னை வீரர் அஜித் கிருஷ்ணன்.. தமிழ்நாட்டுக்கே பெருமை!
டெல்லி: இஸ்ரோவின் ககன்யான் மிஷன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இதில், தமிழகத்தின் சென்னையை சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் என்பவரும் ஒருவர். யார் இவர்? எப்படி இதில் இவர் தேர்வானார் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
விண்வெளியில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முடித்து சாதித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவுக்கு போட்டியாக இந்தியாவின் இஸ்ரோவும் விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இதற்கு சிறந்த சான்றாக, நிலவை நோக்கிய சந்திரயான் 3 பயணம் தான்.

உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை அது படைத்து இருந்தது. எந்த நாடுகளுமே செய்ய முடியாத சாதனையாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரோ தனது அடுத்த முயற்சியாக ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
சென்னையை சேர்ந்தவர்: ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோ பல ஆண்டுகளாக உழைத்து வருகிறது. இந்த நிலையில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி வெளியிட்டார். இதன்படி, குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாணடர் சுபான்சு சுக்லா ஆகிய 4 பேர் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்குச் செல்ல இருக்கின்றனர்.
விண்வெளிக்கு செல்லும் இவர்கள் 4 பேரும் பல்வேறு பயிற்சிகளை முடித்து தான் இதில் தேர்வாகியிருக்கிறார்கள். விண்வெளிக்கு செல்ல தேர்வாகியுள்ள 4 வீரர்களில் ஒருவரான குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். சென்னையை சேர்ந்த அஜித் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றுள்ளார்.
ஜனாதிபதியிடம் தங்கப் பதக்கம்: இதேபோல், அஜித் கிருஷ்ணன் டிஎஸ்எஸ்சி எனப்படும், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் ஸ்டாப் சர்வீசஸ் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இதேபோல், சுமார் 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டுள்ளவர். சுகோய்-30 எம்.கே.ஐ., மிக்-21, மிக்-29, ஜேகுவார், டார்னியர், ஏ.என்.-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை இயக்கிய அனுபவமும் அஜித் கிருஷ்ணனுக்கு இருக்கிறது.
மேலும் விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாளை பெற்றிருக்கிறார். இதன் பின்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர்ப்பிரிவில் அஜித் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் பயிற்சி விமானிகளுக்கான ஆசோகராக பணியில் நியமிக்கப்பட்டார்.
மூன்று நாட்கள் தங்குவார்கள்: தொடர்ந்து ஆலோசகராக பணியாற்றி வரும் அஜித் கிருஷ்ணன் விமானப்படையின் புதிய விமானத்திற்கான சோதனை பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் 4 பேர் பெயரில் இவரது பெயரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு செல்வது தமிழ்நாட்டுக்கும் பெருமையாக பார்க்கப்படுகிறது.
400 கிமீ தொலைவிலுள்ள சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும் இந்திய விண்வெளி வீரர்கள், அங்கே மூன்று நாட்கள் வரை தங்கி இருப்பார்கள். இதன் பிறகு மீண்டும் அவர்கள் ராக்கெட் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications