Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசத்தல்.. அடல் பென்ஷன் யோஜனா.. மாதம் ரூ.5000 ஜாக்பாட்.. பலனை தரும் மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓய்வூதியதாரர்களுக்கு, மாதந்தோறும் ரூ.5000 வரை வருமானம் பெரும்படியாக ஓய்வூதிய திட்டத்தினை மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அது என்ன திட்டம் தெரியுமா?

பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.. அதில் மிக முக்கியமானது சிறு சேமிப்பு திட்டங்களாகும். இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானது.. ஓரளவு அதிக வட்டி அளிக்கக்கூடியதுமாகும்..

 Atal Pension Yojana Scheme and what are the Benefits in the Atal Pension Yojana APY Scheme

சேமிப்புகள்: தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன. அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை.. வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

அதில் ஒன்றுதான், ஓய்வூதியதாரர்களுக்கும் மத்திய அரசு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது.. அதன்பெயர்தான், அடல் பென்ஷன் யோஜனா எனப்படும் அடல் ஓய்வூதிய திட்டம். இப்போதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்..

கடந்த மே 2015ம் ஆண்டு பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.. தேசிய ஓய்வூதிய அமைப்பு மூலமாக ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வசதிகள்: அடல் ஓய்வூதிய திட்டமானது வயதானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில், வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் தரக்கூடியது.. ஓய்வூதியத் தொகையாக மாதந்தோறும் சந்தாதாரருக்கு ரூ. 1,000 முதல் 5,000 வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலும்.

இதைத்தவிர, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 என்பது போலவும் பென்ஷன் கிடைக்கும் வகையில் திட்டங்களை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.. 18 வயதுள்ள ஒருவர் 60 வயதில் ரூ.1,000 பென்ஷன் பெற விரும்பினால், அவர் மாதம் ரூ.42 முதலீடு செய்து வர வேண்டும்... ஆனால், இதுவே 40 வயதில் ஒருவர் இந்த திட்டத்தில் இணையக்கூடும் என்றால், அவர் மாதம் ரூ. 291 கட்ட வேண்டும். இதற்கு நடுவில், அதிக தொகையை கட்டி பென்ஷனை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஏதேனும் காரணத்தினால் சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும்... ஒருவேளை 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்..

தகுதிகள்: சந்தாதாரர் 60 வயது பூர்த்தியடையும்போது மட்டுமே இந்த அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான 100 சதவீதம் பென்ஷன் தொகையையும் இந்த சந்தாதாரர் பெற முடியும்... 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்திலிருந்து வெளியேற முடியாது. இருந்தாலும், விதிவிலக்குகள் உண்டு.. சந்தாதாரர் இறந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருத்தல் போன்ற அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே இது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தில் இணைவது எப்படி: அடல் பென்ஷன் திட்டத்தை ஒருவர் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்க முடியும். வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் போன்ற ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் இந்தக் கணக்கை நாம் துவங்க முடியும். வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது.

பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளின் ஒரு கிளைக்கு 100க்கும் மேற்பட்ட அடல் பென்சன் திட்டக் கணக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+