டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! பெரும்பான்மையை நிரூபிக்கிறார் அதிஷி!
டெல்லி: முதலமைச்சர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து இன்று சட்டப்பேரவையில் அதிஷி பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வராக இருந்தபோது கெஜ்ரிவால் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த கடந்த 2022ல் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நேரத்தில் அதிரடியாக அவரை கைது செய்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் இருந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தது, இந்த குற்றச்சாட்டுகளை உண்மை என்கிற விவதங்களை ஏற்படுத்தியது.
கைது நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்த கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சில நாட்கள் மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது. பிரசாரம் முடிந்த பின்னர் மீண்டும் கெஜ்ரிவால் சிறை சென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கைது செய்திருப்பது, எதிர்க்கட்சிகளை முடக்கவே என்று ஜெக்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில வாதிடப்பட்டது. கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என கடைசியாக உச்சநீதிமன்றம் சென்று கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றார்.
ஜாமீன் பெற்று வெளியே வந்ததும், முதல் வேலையாக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னை மக்கள் நேர்மையானவர் என்று கருதும் வரை இந்த பதவியில் தொடர மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். இதனையடுத்து, அதிஷி புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று டெல்லி பேரவையில் அதிஷி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. இதனால் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.
பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், குளிர் காலத்தில் ஏற்படும் காற்று மாசை தடுப்பது குறித்த செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும், டெல்லியில் காற்று மாசு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக 21 அம்சங்களை கொண்ட செயல்திட்டம் ஏற்கெனவே முன்மொழியப்பட்டிருக்கிறது. இன்று இது குறித்து விவாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications