அந்த 11 பந்துகள்.. ஆஸ்திரேலியாவின் அஸ்திவாரத்தை அதிர வைத்த 2 "ரவிகள்".. மேட்சில் இதை கவனிச்சீங்களா?
பொதுவாக ஆஸ்திரேலியா எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அதிக போராட்ட குணத்தோடு ஆடும்.
டெல்லி: இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் கடுமையாக திணறி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
கடும் பனிபொழிவிற்கு இடையில் மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர். கடந்த போட்டியில் களமிறக்கப்பட்ட சூர்யா குமார் யாதவ் இந்த போட்டியில் களமிறக்கப்படவில்லை.

மேட்ச்
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் குவாஜா 81 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் மற்ற டாப் வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதனால் 263-10 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அவுட் ஆனது. மிடில் ஆர்டரில் இறங்கிய ஹேண்ட்ஸ்காம்ப் மட்டும் 72 ரன்கள் எடுத்தார். மற்றபடி ஸ்மித், வார்னர் என்று டாப் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். சமி பவர் பிளேவிலும், பின்னர் கடைசி கட்டத்திலும் சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட் எடுத்தார்.

இந்திய அணி
இதையடுத்து முதல் நாளே களமிறங்கிய இந்திய அணி விக்கெட் எதையும் இழக்கவில்லை என்றாலும் இரண்டாவது நாளில் இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இறங்கிய கோலி 44 ரன்கள் எடுத்து மிடில் ஓவர்களில் விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தினார். பின்னர் லோவர் ஆர்டரில் இறங்கிய அக்சர் 74 ரன்கள், அஸ்வின் 34 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டும் 262-10 ரன்கள் எடுத்தது. ஒரு ரன் முன்னிலையோடு இறங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று 1 விக்கெட்டை மட்டும் இழந்து 61 ரன்கள் எடுத்து இருந்தது. மூன்றாவது நாளான இன்று முதல் ஓவரிலேயே அஸ்வின் பந்தில் ஹெட் அவுட் ஆனார்.

22 வது ஓவர்
அதன்பின் 22 வது ஓவரில் இருந்து வெறும் 11 பந்தில் ஆஸ்திரேலியா வரிசையாக 4 டாப் விக்கெட்டுகளை இழந்தது. 21.4வது பந்தில் மார்னஸ் லாபுசேன் ஜடேஜா வீசிய பந்தில் போல்ட் ஆனார். 22.6 பந்தில் மேட் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 23.1 பந்தில் பீட்டர் ஹேன்ஸ்காம்ப் ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். 23.2வது பந்தில் பாட் கும்மின்ஸ் ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின் என்ற இரண்டு ரவிக்களும் மாறி மாறி கொடுத்த அழுத்தம் காரணமாக ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் அப்படியே சரிந்தது.

விக்கெட்
85-3 என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா இதனால் வெறும் 95 ரன்களுக்கு 7 விக்கெட் என்று நிலையை அடைந்தது. பொதுவாக ஆஸ்திரேலியா எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அதிக போராட்ட குணத்தோடு ஆடும். டாப் ஆர்டர் சரிந்தாலும் மிடில் ஆர்டர் போராட்ட குணத்தோடு பேட்டிங் செய்யும். ஆனால் இன்று வந்த வீரர்கள் எல்லோரும் எனக்கு என்ன வந்தது என்பது போல பெரிதாக போராடாமல் விக்கெட்டை தூக்கி கொடுத்தனர். ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயலால் இன்றே இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications