சூடு பிடிக்கும் அயோத்தி வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் பிப். 26 முதல் 5 நீதிபதி பெஞ்ச் விசாரணை
Recommended Video

டெல்லி: அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் பிப்ரவரி 26 முதல் விசாரிக்க உள்ளது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் இந்த வழக்கு மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
இந்த வழக்கின் விசாரணை தேர்தலுக்கு முன் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனாலும் தீர்ப்பு தேர்தலுக்கு முன் வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

பிரச்சனை என்ன
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம், எந்த அமைப்பு இதற்கு உரிமை கோரமுடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். இந்த நிலம் தங்களுடையது என்று இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சண்டையிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.

வழக்கு மேல்முறையீடு
இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ளும்படி கூறியது. ஆனால் இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். இத மேல்முறையீடு மீதான வழக்கு இப்போதான் விசாரணைக்கு வருகிறது.

தள்ளிப்போனது
இந்த வழக்கின் சென்ற விசாரணையின் போது அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யுயு லலித் திடீரன்று விலகினார். நீதிபதி யுயு லலித் தானாக விலகுவதாக அறிவித்தார். நீதிபதி யுயு லலித் பாபர் மசூதி தொடர்பான வழக்கில் ஏற்கனவே வக்கீலாக இருந்த போது ஆஜராகி இருக்கிறார், இதன் காரணமாக அவர் அமர்வில் இருந்து விலகினார்.

மீண்டும் விசாரணை
அதன்பின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுப்பில் சென்று இருந்தார். இந்த நிலையில் தற்போது அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் பிப்ரவரி 26 முதல் விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த அமர்வில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications