அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் குறித்து உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்.. தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி: அயோத்தி விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தர் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
அயோத்தி விவகாரத்தில் அனைத்துத் தரப்பும் ஒத்துக் கொண்டால் மத்தியஸ்தம் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே கூறியிருந்தார். ஆனால், பேச்சுவார்த்தையை பொது மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அயோத்தி, பிரச்சினை கிடையாது. இது இந்து மத நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்றும் உச்சநீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் சமரசம் பேச மத்தியஸ்தரையோ அல்லது குழுவையோ பரிந்துரைத்தால் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மேல் முறையீடு
முன்னதாக அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி, பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை சம்பந்தப்பட்ட மூன்று அமைப்புகள் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியில் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள இடம் சன்னி வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என உத்தரவிட்டது. இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.

அமர்வு விசாரிக்கும்
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களும் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்கள் புதியதாக அமைக்கப்பட இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தனர்.

மத்தியஸ்தம்- யோசனை
அதன்படி, நியமிக்கப்பட்ட புதிய அமர்வில் இடம்பெற்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்கக் கூடாது என்று யோசனை தெரிவித்தார். மேலும் அனைத்து தரப்பும் எதிர்ப்பு இல்லை என்று கூறினால் மத்தியஸ்தம் குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாகவும் கூறினார்.

யோசனைக்கு மறுப்பு
மத்தியஸ்தம் என்ற யோசனையை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் ராம் நல்லா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் கடந்த காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை சுட்டிக்காட்டி அந்த யோசனையை ஏற்க மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications