Budget 2024: அயோத்தி ராமர் கோவில்-பல நூற்றாண்டு கால கனவு நிறைவேறியது- திரவுபதி முர்மு பெருமிதம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதன் மூலம் பல நூற்றாண்டு கால கனவு நிறைவேற்றி இருக்கிறது; அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டது முதல் 13 லட்சம் குழந்தை ராமரை தரிசனம் செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையின் முக்கிய அம்சங்கள்:

- சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் தொடங்கப்பட்டது; நிலவின் தென் துருவம் அருகே பாரதத்தின் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
- மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது; சட்டசபை, நாடாளுமன்றத்தில் இனி பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
- அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
- 10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலைமையை எட்டியுள்ளோம். கதர், கிராம பொருட்கள் விற்பனை 4 மடங்கு அதிகரித்துள்ளது.
- புதிய தேசிய கல்விக் கொள்கையை வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். 10 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. ஓபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்புகளில் 28% இடஒதுக்கீடு வழங்கினோம். 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி பாதையை வகுத்து செயல்படுகிறது மத்திய அரசு.
- ஜி20 உச்சி மாநாட்டு டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டுள்ளது; புதிய சர்வதேச அமைப்புகள் உருவாக்கப்பட்டன; வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
- அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கனவு பல நூற்றாண்டுகளாக இருந்தது. இன்று இது உண்மையாகி இருக்கிறது. இந்த நீண்டகால கனவு நிறைவேறி குழந்தை ராமர் அயோத்தியில் கோவிலில் அமர்ந்திருக்கிறார். அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு பின்னர் 13 லட்சம் பேர் வழிபாடு செய்துள்ளனர். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications